பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூற்பா வடிவில் அமையவில்லே, அவ்வளவே. இவ்வுரையிலக் கணங்கள் பலவற்றைப் பவணந்தியார் நூற்பித்துக் கொண் டார். மொழிக்கு முதலெழுத்துக்களைப் பற்றி உரை செய்கையில், சகடம் சையம் சட்டி சமழ்ப்பு சம்பு சள்ளே செளரியம், ஞமலி யவனர் யுத்தி யூபம் யோகம் யெளவனம் என்ற புது வழக்குகளை உரையாசிரியர்கள் ஆய்ந்து கொள்ளுவதும் தள்ளுவதும் செய்வர். ஆய்தத்தின் முப்பாற் புள்ளியை இக் காலத்தார் நடுவு வாங்கி எழுதுவர் எனவும், அருகே பெற்ற புள்ளியை இக் காலத்தார் காலாக எழுதுவர் எனவும், மகரம் உட்பெறு புள்ளியை வளைத் தொழுவர் எனவும் நச்சினர்க் கினியர் தங்காலத்து வரிவடிவை வெளிப்படுத்துவர். சங்க கால முதற் தங்காலம் வரை வழக்கிலும் செய்யுளிலும் கழிந்தவற்றையும் புதுவதாகப் புகுந் தவற்றையும் ஆராய்ந்து காட்டிய உரைக் கூறுகள் எண்ணிறந்தன. அவற்றை யெல்லாம் காட் டற்கு இஃது இடமில்லே சுருங்கச் சொல்லின் புதிய இலக்கண நூல் தோன் ருக் குறையை இவ்வுரைகள் உரை நடை வடிவில் நிறைவு செய்தன. தமிழினத்தின் இலக் கன மனவொழுங்கை வழிவழி வளப்படுத்தின. இலேசிலுைம் பிறவற் ருலும் தொல்காப்பியத்துக்கு மிகைபட எழுதினர்கள் என்று உரைச் சான்ருேர்களைக் கேலி செய்ய வேண்டா. தழுவு நடை யுடையது தொல்காப்பியம் என்பதைக் கருத்திற் கொண்டும் , மிகை என்பவை உரையாசிரியர் காலத் தன் ை மொழியியல் என்ற கருத்து வாங்கிக் கொண்டும் பார்த்தால், நகை பிறவாது, நன்றியே பிறக்கும். காலவுரை :- மூன்ருவதான காலவுரை என்பது உரையா சிரியர்கள் பிற்காலத்துத் தோன்றிய சமயக் கொள்கைகளையும் சமுதாயப் பழக்க வழக்கங்களேயும் அயல்நெறிக ளேயும் காலக் கோட் பட்டுத் தொல் காப்பியத்தில் கொண்டு வந்து புகுத்திய கருத்து விளக்கம். இது வேண்டுமென்று வலிந்து செய்யப்படும் வல்லுரையன் று. கால ஆதிக் கத்தினின்றும் எழுத்தாள ன் விடுபட முடியாத ஒரு சூழ்நிலையாகும். சில எடுத்துக் காட்டுக் கள்: வடவேங்கடம் தென் குமரி’ என்ற பாயிர அடிக்கு எழுதிய உரைவிளக்கங்கள்:- --- இளம்பூரணர்:- மக்கலத் திசையாகலின் வடக்கு முற் கூறப்பட்டது. பிற இரண்டெல்லே கூருது இம்மலையும் ஆறும் 4 * 4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/421&oldid=743570" இலிருந்து மீள்விக்கப்பட்டது