பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யவர்கள் இந்திய ஒப்பீட்டுப் பஞ்சாங்கம் (Indian Ephemeris) ஒன்று தொகுத்துள்ளார். அதனில் கி. பி. ஏழாம் நூற்ருண்டி லிருந்து ஒவ்வொரு நாள் திதி முதலிய வைக்கும் ஒப்பான ஆங்கிலத் தேதி கணிக்கப்பட்டுள்ளது. அப்பஞ்சாங்கத்தினை கொண்டு பொருத்திப் பார்த்து ஆழ்வார்களின் பிறந்த ஆங்கில ஆண்டு மாதம் தாள் கிழமைகளேக் கணிக்க முடிகின்றது. ஆழ்வார்களின் வரிசையில் முதல் மூன்றழ்வார்களுள் திரு மழிசைப் பிரானும் முதலில் நிற்கின்றனர் இவர்கள் நால்வரும் ஒரு முறை சந்தித்தமை பற்றிய குருபரம்பரையிருத்தலால் இவர் களே ஒரு காலத்தவராக்குவர். திருமழிசையார் கொடுத்தளித் த கோனே குணபரனே” என ஒரு குணபரனேக் குறிப்பது I மகேந்திர வர்மப் பல்லவனே க் குறிப்பதாகக் கருது வது பொருத்தமேயாகும். அவ்வாருயின் இவர்கள் நால்வரும் கி. பி. ஏழாம் நூற்ருண்டில் வாழ்ந்துள்ளனர். ஆசிரியர் பலர் முதலாழ்வார்கள் மல்லே, விண்ணகரம் முதலிய பெயர்களே ஆண்டிருப்பது கொண்டு இவர்களைக் கி. பி. எட்டாம் நூற்ருண்டுக் குரியராக்குவர். கி. பி. ஆரும் நூற்ருண்டிலேயே முதல் நந் திவர்மன் இருந்துள்ளான். அவன் கட்டிய நந்திபுர விண்ணகரத்தை ஆழ்வார் பாடல் குறிப் பதால் அவர்கள் 6-7-ஆம் நூற்ருண்டிலேயே வாழ்ந்தவராவர். மாமல்லன், 11 நரசிம்ம வர்மனுக்குப் பின் பே மாமல்லபுரம் எனப் பெயர் வந்தது . எனவே மல்லே யாட்சி ஏழாம் நூற்ருண்டின் பிற்பகுதி எட்டாம் நூற்றண்டி ற்குச் செல்லும் என்பது ஒரு கட்சி. மல்லே என்பது வளம், அது நரசிம்மனுக்கு முன்பும் வழக்கி லிருந்ததென்பது மற்ருெரு கட்சி. கோச்செங்கணுனேப் (கி. பி. 6-ம் நூற்றண்டு) பாடிய பொய் கையாரும் பொய்கை யாழ்வாரும் ஒருவரே யாவர் எனவே இவர்கள் 6-7 நூற்ருண்டிற்குரியார் என்பது ஒரு கட்சி. இவ்வாறெல்லாம் ஆழ்வார்கள் காலம் விவாதிக்கப்பட்டு வந்தது. குருபரம்பரைப்படி இவர்கள் நால்வரும் ஒரே சித்தார்த்தியில் . பிறந்துள்ளனர். முதல் மூவரும் ஐப்பசி மாதத்திலேயே தோன் றினர். திருமழிசை தை மாதத் தினர். முதல் மூவர் ஒருவர் மற்றவர்க்கு ஒரு நாள் பிந்தி திருவோணம் அவிட்டம் சதயம் ஆகிய நட்சத்திரங்களில் தோன் றினர். கி. பி. 539-ல் ஒரு சித்தார்த்தி ஆண்டு நிகழ்ந்துள்ளது. இவர்கள் அனைவரும் 419

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/426&oldid=743575" இலிருந்து மீள்விக்கப்பட்டது