பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீண்டகாலம் (100 ஆண்டுகட்கு மேலும்) வாழ்ந்திருக்கக் கூடு மெனத் தெரிதலாலும் எட்டாம் நூற்ருண்டிற்குரிய ஆழ்வார் களுக்கு எவ்வகையிலும் முந்தியவர்களாதலாலும் இவர்களே 6.7-ஆம் நூற்ருண்டிற்குரியராகவே கொள்ளவேண்டியுள்ளது . குருபரம்பரை இவர்களுடைய திதி நட்சத்திரம் நாள் முதலிய வற்றைக் கொடுக்கவில்லை. மற்றும் ஒப்பீட்டுப் பஞ்சாங்கம் கி. பி. ஆரும் நூற்ருண்டுக்கு முறையாகத் தொகுப்பினேச் செய்ய வில்அல. எனவே திட்டமான நாட் கணிப்பை இம் முதல் ஆழ் வார் களுக்குக் காண்பதில் இதன் உதவி ஒரளவே கிடைக்கின்றது. மற்ற ஆழ்வார்களுக்கு இப்பஞ்சாங்கம் நன்கு பயன்படுகின்றது. கி.பி. 8 ஆம் நூற்ருண்டைய ஆழ்வார்களுள் பெரியாழ்வார் நம்மாழ்வார் ஆகியோர் தேதிகளே (27-5-725; 4-5-798) வரலாற் ருசிரியர்கள் எடுத்துக் காட்டிப் பேசுவதிலிருந்து இத்தகைய குறிப்பிட்ட தேதிகளைக் காணும் முயற்சி முன்பே இருந்தமை யறிகிருேம் பெரியாழ்வார் பாண்டியன் நெடுமாறன் என்பவனேக் குறித்துப்பாடுகிறர். அவன் கி பி 8. ஆம் நூற்றண்டின் பிற்பகுதி யில் ஆண்ட பராந்தக நெடுஞ்சடையன கக் கருதப்படுகிருன். மற்றும் குருபரம்பரையில் பெரியாழ்வார், நம்மாழ்வார். ஆண்டாள் ஆகியோரைப் பற்றிப் பேசும் பொழுது சீவல்ல பப் பாண்டியனைப் பற்றிய குறிப்பு வருகின்றது. திவ்யசூரிசரிதம் இப்பாண்டியனே நம் மாழ்வாருடன் தொடர்புறுத்துகினறது. ஆண்டாள் வரலாற்றை ஆராயும் ஆசிரியர்கள் வெள்ளி யெழுந்த வியாழம் உறங்கிற்று” என்ற தொடர்களேயெல்லாம் மேற்கொள்ளுகின்றனர். நம்மாழ் வார் காலத்திற்கு வரகுணமங்கை, சீவரமங்கை ஆகிய விடங் க ஆள அவர் பாடியிருப்பதே போதுமானது. சீவரமங்கலம் ஏற்பட்டதற்கே கல்வெட்டு சான்றுள்ளது. அப்பெயருடை மன்னர்கள் காலத்தேற்பட்டனவே அந் நகர்கள். இவற்றை யெல்லாம் கண்டும் சீனிவாசப் பிள்ளே போன்றவர்கள் ஏராள மான எளிய ஆதாரங்களை யெல்லாம் எடுத்துக்கொண்டு விரி வான ஆராய்ச்சிகளை நடத்தியுள்ளனர். பெரியாழ்வார் குரோதன, ஆனி, சுக்லபட்சம், ஏகாதசி, சுவாதி சேர்ந்த ஞாயிறன்றும் நம்மாழ்வார் வெகு தானிய, வைகாசி, சுக்கிலபட்சம் பெளர்ணமி விசாகம் கடக லக்கினம் 420

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/427&oldid=743576" இலிருந்து மீள்விக்கப்பட்டது