பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலம் டாக்டர் மெ. சுந்தரம் மாநிலக் கல்லூரி, சென்னை சங்க இலக்கிய நூல்களின் கால ஆராய்ச்சி, கடந்த ஒரு நூற்ருண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. டாக்டர் கால்டுவெல் கி. பி. 9 அல்லது 10 ஆம் நூற்ருண்டே சங்க இலக் கிய காலம் என முடிவு கட்டினர். சங்க நூல்களும் தொல்காப்பிய மும் அச்சேருதிருந்த காலத்தில் தமிழின் தொன்மையை நிலை நாட்டும் இந்நூல்களைப் பாராத நிலையில் அவர் இங்ங்ணம் முடிவு கட்டினர். வான நூல் ஆராய்ச்சிக் குறிப்புக்களேக் கொண்டு திரு. L. D. சுவாமிக் கண்ணு பிள்ளே கி. பி. ஏழு அல்லது எட்டாம் நூற்ருண்டே சங்க இலக்கிய காலமென அறுதியிடுவர். இவை தவறுடையன எனத் திரு. K. G. சேஷ அய்யர் திருவாரூர் S. சோமசுந்தர தேசிகர் ஆகிய இருவரும் மறுத்துள்ளனர். திரு. மு. இராகவ அய்யங்கார் கி. பி. ஐந்தாம் நூற்ருண்டு தான் என்ற தம் கருத்தைச் சேரன் செங்குட்டுவன் என்ற நூலின் இரண்டாம் பதிப்பில் விலக்கிக்கொண் டார். சிலப்பதிகாரச் சான்று செங்குட்டுவன் தன் தலைநகரமாகிய வஞ்சியில் கண்ணகிக் குக் கோயில் கட்டுவித்து, கடவுள் மங்கலம் செய்வித்த அன்று, இலங்கை மன்னன் கயவாகு அங்கு இருந்தான் (சிலம்பு 160-4). அவன் தன் நாட்டிற்குச் சென்று கண்ணகிக்குக் கோயி லமைத்து வழிபாடு செய்தான். அப்படிமம் கி. பி. 1830 இல் இலண்டன் கொண்டு போகப்பட்டு, இப்போது இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாகத் தெரிகிறது (Selected Examples of 432

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/439&oldid=743589" இலிருந்து மீள்விக்கப்பட்டது