பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Indian Art, Plate 33) இலங்கையில் முதற் கயவாகுவின் காலம் கி. பி. 171-190 வரை என்று இலங்கை மகாவம்சம் கூறுகிறது . (r. 38). இக் காலமே சிலப்பதிகார காலத்திற்கான பிற சான்று களுடன் ஒத்து வருகிறது. கண்ணகிக் குச் சிலேயெடுக்கச் சேரன் செங்குட்டுவன் வட நாடு நோக்கிப் படையெடுத்துச் சென்ற போது கங்கை யாற்றைக் கடக்க நூற்றுவர் கன்னர் உதவிய தாக வருகிறது. சாதவாகன மன்னர்களில் சிறந்தவராகிய பரீ யக்ஞ சதகர்ணி என்பவரே கங்கையாறு வரை சிறப்புற ஆண்டவராதலின் அவரே, செங்குட்டுவ னுக்கு உதவியவராதல் வேண்டும். சதகர்ணி என்பதே நூற்றுவர் கன்னர் என்று மொழி பெயர்க்கப்பட்ட தென்று எளிதில் ஊகிக்கலாம் இந்த ரீயக்ளு சதகர்ணியின் காலம் கி. பி. 174 முதல் 203 வரையாகும். இச் சான்றும் மேற்காட்டிய சான்றுகளுடன் ஒத்து வருவதால் சிலப் பதிகார காலத்தை கி. பி. 2. ஆம் நூற்ருண் டு எனக் கொள்ளலா மன் ருே? யவனர்களே ப்பற்றிய சான்று கிரேக்க உரோமர்களாகிய யவனர்களைப்பற்றித் தமிழ் இலக்கி யத்தில் காணப்படும் செய்திகளும், அந்நாட்டு யாத்ரிகர்களின் குறிப்புக்களும், தமிழகத் தில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொன்மை மிக்க யவன நாணயங்களும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புபடச் சான் ருக நின்று, சங்க இலக்கியக் காலத்தின் தொன்மையை நிலைநாட்டுகின்றன. அகநானூற்றுப் பாடலில் (149) யவனர்கள் சேரநாட்டு முசிறித்துறை முகத்தில் வந்து, பொன்னேக் கொடுத்து மிளகுப் பொதிகளே ஏற்றிச் சென்ற விபரம் கூறப்படுகிறது . இதனைப் பெரிபுளுஸ் என்ற நூலின் ஆசிரியராகிய யவன யாத்திரிகர், குறிப்பிடும் கீழ்வரும் பகுதியுடன் ஒப்பிட்டு உண்மை காணலாம். “Below the white Island (Thoovak-kal) commences the kingdom of Keprobotas (cheraputra) styled simurike (Tamilakam) the first mart of which is Naoora, then Tundis (Thondi) a large 4.38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/440&oldid=743591" இலிருந்து மீள்விக்கப்பட்டது