பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

village close to the shore, and next to these Moozisis (Muchiri) a flourishing place frequented both by the native vessels Artake (Aryakam) and by the Greeks from Egypt” (The Tamils 1800 Years Ago, p, 33). இந்த பெரிபுளுஸ் என்ற நூல் கி. பி. 60 இல் தோன்றிய தாகும். மேலும் கி. பி. 77 ஐச் சேர்ந்த பிளினியின் இயற்கை வரலாறு, சுமார் கி. பி. 150ஐச் சேர்ந்த தாலமியின் பூகோள விவரணம் ஆகியவற்றில் அவ்வெளிநாட்டு அறிஞர்கள் தமிழ கத்தைப் பற்றியும் அதன் வெளிநாட்டு வாணிகத் தொடர்புகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர். யவனர்களுடன் நம் நாட்டிற்கு வாணிகத் தொடர்பு மிகுதியாக இருந்தது. யவன நாட்டு நாணயங்கள் பல நம் நாட்டில் கண்டெடுக் கப்பட்டுள்ளன. “கி. பி. முதல் இரண்டு நூற்ருண்டுகளில் உரோமை வாணிகம் மிகப் பெருகியது. தென் னிந்தியாவிலுள்ள நகரங்கள் சில வற்றில் உரோமை நாட்டு வணிகர்கள் குடியேறினர்கள். உரோ மைப் பேரரசர் நீரோ கி. பி. 68 இல் இறந்த பின் இவ்வாணிகம் குன்றியது’’ என டாக்டர் K. K. பிள்ளை குறிக்கிருர், K. A. N. & reso flifluluh 3) # 35(535,360 (30 (The Pandyan Kingdom, p. 11). இக் கருத்துக்களுக்கு ஏற்பப் பழந் தமிழகத்தில் யவனர்கள் வாணிக நிமித்தமாக வந்து குழுமி, மக்களுடன் கலந்தமையைச் சங்க இலக்கியங்கள் கண்ணுடிபோற் காட்டித் தெரிவிக்கின்றன. (பெரும்பாண் 31 புறம் 56, முல்லே 59-61). பல்லவர் காலச் சான்று கி.பி. 300-500 காலப்பகுதியில் தமிழகத்தை ஆண்ட பல்லவர் களப்பிரர் பற்றிச் சங்க இலக்கியத்தில் ஒரு குறிப்பு இன்மையால், சங்க நூல்கள் இவர்கள் காலத்திற்கும் முற்பட்டது எனலாம். இலக்கியச் சான்று சமய கால இலக்கியம் கி. பி. 6 ஆம் நூற்ருண்டுக்குப் பின்னர் என்பது ஆழ்வார்கள் நாயன் மார்கள் கால ஆராய்ச்சி களால் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இச்சமய இலக்கியங் களி ல், சமயப் போராட் டங்களும் பூசல்களும் வசைகளும் 43.4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/441&oldid=743592" இலிருந்து மீள்விக்கப்பட்டது