பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணுகிற நாம் இத்தகைய பூசல்களினின்று எல்லாச் சமயங்களேயும் ஒருங்கு நோக்கிச் சமமாகப் பாடியவையும் பிற சமயங்க களத் தாக் காதவையுமான காப்பியங்கள் தோன்றிய காலம் இதற்குச் சில நூற்றண்டுகட்கு முன்பாக இருந்திருக்க லாம் என நம்பலாம். இனி இவ்வேறுபட்ட மதங்களின் குறிப்புக் களே இன்றி, அடிப்படை உண்மைகளை மட்டும் கூறிப்போவன வும். பெரும்பாலும் வாழ்வோடு ஒட்டிய அனுபவங்களேயே படைப்பனவுமாகிய சங்க இலக்கியங்கள் இக் காப்பியங்கள் தோன்றுவதற்குச் சில நூற்ருண்டுகளுக்கு முன்னர்த் தோன்றி யிருக்கக்கூடும் என்பது மன.நூ ன் முறைக்கும் மொழி நூன் முறைக்கும் ஒத்த முடிபேயாகும். சமய கால நடை எளிமை காப்பிய காலத்தில் இல்லே. சங்க காலத்து அது இன்னும் இறுக்கம் உடையதாயிற்று. வ, ழ் வியலும் புஜனவும் என்று கொண்டாலும் சங்க காலத்து உண்மை வாழ்வியலே இலக்கியத்து ஆட்சி செய்தது காப்பிய காலம் வாழ்வியலுடன் புனேவுகளையும் படைத்துக் கூறியது. சமய காலத்து புஜனவியலே மிகுதி. வடசொல்லாட்சி சங்க நூல்களில் 2%க்குக் குறைவு. அதிலும் பல சொற்கள் எம்மொழிக்குரியன என்று இன்னும் ஆராயத்தக் கன. காப்பிய காலத்து 10% வீதமும் சமய காலத்து இது 15 or 20% வரையும் மிகுந்து விரவியும் வரு வதை நோக்கச் சங்க காலத்தின் தொன் மை மீண்டும் தெளி வடைகிறது, சமய காலச் சொற்கள் விரிவுடையன. உருபுகள் விரிந்து நிற்பன. காப்பிய காலத்தில் உருபுகள் விரிந்து நிற்கும் நிஆலயின் தொடக்க நிலையையே காண் கிருேம். சங்ககால நூல்களிலோ உருபு விரியாத ஒரசை, ஈர ை ச் சொற்களே ஒவ் வொரு நூலிலும் 90% மேல் எடுத்தாளப்பட்டுள்ளன. எனவே இவ்விலக்கியங்களின் கருத்து, நடை , கற்பனை சொல்லாட்சி போன்றவை கருதியும் சங்க நூல்களின் தொன் மையை நிறுவலாம். - மோரியர் படையெடுப்புச் சான்று மோரியர்களின் தென் ட்ைடுப் படையெடுப்பைப் பற்றிச் சங்க இலக்கியங்களுள் நான்கு இடங்களில் குறிக்கப்படுகின்றன (அகம் 69, 251, 281, புறம் 175). 435

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/442&oldid=743593" இலிருந்து மீள்விக்கப்பட்டது