பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்பாடல்களில் இம்மோரிய மன்னர் வடுகர்களேத் துணைக்கு அழைத்துக் கொண்டு இடை நின்ற மலே யைக் குடைந்து வழி யமைத்துத் தென் டுைநோக்கிப் போந்து கோசர்களுக்கு மோகூர் மன்னனே வெற்றிக் கொள்ள உதவினர். மோரியர் பற்றிய செய்திகளைப் பெள ராணிகக் கருத்துக் கள் என்று ச. வையாபுரிப் பிள்ளே எவ்வித ஆதாரமுமின் றியே மறுத்துள்ளார் (இலக்கிய தீபம் 131-144), 305. K. A. N. & Toro & flu is st A History of South India sra3i spy தாம் வெளியிட்ட நூலின் இரண்டாம் பதிப்பில் தம் கருத்தைக் கீழ்வருமாறு எழுது கிறார். Mamulanar himself and other poets make further references to the Mauryas strongly tinged with mythology of the Concept of Chakravarti - the wheel Emperor. But these need not detain us or detract from the Value of the specific historical references in Mamulanar cited above (p 89). இச் சான் றுக ளில் வரும் மோகூர் தெளிவாகச் சேரநாட்டுப் பகுதியிலே இருந்த மோகூரைக் குறிக்கிறது எனக் கருதலாம். தொண்டி, முசிறி போன்ற ஊர்ப் பெயர்களும் பாண்டிய நாட்டில் இருந்தன போலவே சேர நாட்டிலும் இருந்தன. அசோகர் கல்வெட்டுக் கள் சித் தபுரி, ஏற்றகுடி என்னும் மேநாட்டுப் பகுதி களில் காணப்படுகின்ற காரணத்தாலும் அவர்கள் வெற்றி கொண்ட மோகூர் சேரநாட்டுப்பகுதியில் இருந்தமை பெறப் படுகிறது. அசோகன் தமிழக அரசு களேப்பற்றி அவனுடைய கல் வெட்டுக்க ளில் குறித்துள்ளான் (Rock Edict 213). கேரள, சோழ, பாண்டியர்களே அவன் நேச நாடுகளென அழைக்கின் ருன் , இம்மூன்று நாடுகளுடன் சத்தியபுத்தரர் என்ற அர ச இனத் தாரையும் சேர்த்துத் தன் நேச நாடுக ளில் அவன் குறிப்பிடு கின் ருன். மூவேந்தரைப் பற்றியே அறிந்திருக்கும் நாம் இச் சத்திய புத்தரர் யார் எனத் திகைக் கிருேம். இவர்களே, ஒன்று மொழிக் கோசர் வாய் மொழிக்கோசர், என்றெல்லாம் அழைக் கப்படும் கோசர்கள் ஆவார்கள். இக் கருத்தை K. K, பிள்ளை 436

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/443&oldid=743594" இலிருந்து மீள்விக்கப்பட்டது