பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்களும் ஒப்புக்கொள்கிறர்கள். வாய்மொழிக்கோசர்களுக்கு உதவியாக மோரியர் மலே மீது வழியமைத்துப் படையெடுத்துச் சென்றமை பற்றிய மாமூலனரின் அகப்பாடலுடன் இதே சத்திய புத்தரரைத் தம் தென் குட்டு நேச நாட்டினருள் ஒருவராகக் குறிப்பிடும் அசோகன் கல்வெட்டுச் சான்றையும் ஒப்பிட்டுக் காண்பவர்க்குத் தமிழ் இலக்கியத்தின் பெருமையும் சரித்திரச் சான் ருகத்தக்க அருமையும் புலகுைம். இனி தென் ட்ைடின் மீது படையெடுத்து வந்த மோரிய மன்னன் யாராக இருக்கலாம் என ஆராய்வோம். பல சரித்திரச் சான்றுகளே ஒப்பிட்டு நோக்கும்போது இப் படையெடுப்பு சந்திரகுப்தன் மகன் பிந்து சாரன் காலத்திலேயே நிகழ்ந்திருக்க வேண்டும் என உறுதிப்படுத்துகிறது. இவனே அமிதகதா என்று யவன ஆசிரியர்கள் அழைப்பர். இதற்குப் பகைவர்களே அழிப்பவன் என்று பொருள். திபெத்திய வரலாற்று _øpò65 iř æir JJB ir 3r @6)&or čı Lı öğ “Bindusara made himself master of all the territory between the eastern and western sear” என்று கூறுகிறர். இது தென் னுட்டை அவன் வெற்றி கொள்ளச் சென்றமையைச் சுட்டுகிறது என வும் சிலர் கருதுகின்றனர். எனவே பிந்து சாரன் காலத்திலேயே மோரியப் படையெடுப்பு நடைபெற்றது என்பது பொருந்துவதாகும். இவன் காலம் கி. மு. 300–272. இவனது காலத்தில் தெற்கே படையெடுத்து வரும்போது , கோசர்களே நட்பரசர்களாக ஆக்கிக் கொண் டான். கோசர்கள் துளு நாட்டிற்கு உரியவர்கள் (அகம்). கோ சர்கள் தாம் நெடு நாட்களாகப் ப ைகத்திருந்த சேரநாட்டு மோகூர் மன்னன் மீது படையெடுக்க விரும்பினர். அவர்கள் வேங்கடமலைத் தொடர் வழியாக வழியமைத்துக் கொண்டு தெற்கே வந்து மோகூர் மன்னனுடன் போரிட்டனர். வேங்கட மலையில் வாழ்ந்த புல்லி’ என்ற மன் ன ல்ை ஆதரிக்கப்பட்டு வாழ்ந்த மாமூலனுர் இச் செய்திகளே அறிந்து மோரியர்களே நேரே கண்டிருக்கக் கூடிய வாய்ப்பினே பெற்றிருந்தார். 437

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/444&oldid=743595" இலிருந்து மீள்விக்கப்பட்டது