பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணியும் சந்தமும் திரு. சுப. இராமநாதன் அண்ணுமலேப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பிரபந்தங்களுக்கு ஒரு தனி இடமுண்டு. அவைகளில் ஒன் ருன பரணி இலக்கியத்தில் பல் வேறு வகையான சந்தங்களைப் பயன்படுத்தி யுள்ளார்கள். பரணியிலே கையாளப்பட வேண்டிய பாவினம் கலித் தாழிசை . கலித்தாழிசைக்கு யாப்பருங்கலக் காரிகை கூறு கின்ற விதி வருமாறு,

  • அடி வரை யின்றி யளவொத்து மந்தடி நீண்டிசைப்பிற்

கடிதலில் லாக் கலித் தாழிசை யாகுங்... (யா. காரிகை. 34) இவ்விதியின்படி அளவொத்த அடிகள் இரண்டு வேண்டும். கடைசி அடி நீண்டு ஒலிக்கவேண்டும். ஒர் அடியில் இத் துணை சர்கள் என்ற வரையறையில்லை. இன்ன சீர்கள்தான் இன்ன தளேதான் வரவேண்டுமென்ற கட்டாயம் இல்லே. புலவனு டைய திறமைக்கேற்பச் சீர்களேக் கூட்டியும் தளேகளே மாற் றியும் பல சந்த மாற்றங்களைக் செய்து கொள்ளலாம். இந்தச் சந்த மாற்ற சாலவித்தையினத்தான் பரணி நூல்களிற் காண்கிருேம். அதில் விஞ்சி நிற்பது கலிங்கத்துப் பரணியாகும். அதேைலயே 'பரணிக்கோர் ஜெயங்கொண்டான்” என்ற சிறப்பிஜனப் பெற்று விடுகின்ருர் ஆசிரியர். கலிங்கத்துப் பரணிக்கு அதிற் காணப் பெறும் வர்ணனை, உவமை, பொருட் சிறப்பு ஆகியவைகளில்ை பெருமையுண்டு. 444

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/451&oldid=743603" இலிருந்து மீள்விக்கப்பட்டது