பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'மீனம்புகு கொடிமீனவர் விழியம்புக வோடிக் கானம்புக வேழம்புகு மட வீர்கடை திறமின் (கடை திறப்பு-20) என்றுபல கூளிகளி ரைத்து ரைசெய் போதத் தன் றிமய வெற்பினிடை நின்றுவரு மப்பேய் (பேய்முறைப்பாடு-9) ‘'என்று கூறலு மானவன் மந்திரி யொன்று கூறுவன் கேளென் றுணர்த்து வான் (காளிக்குக் கூளி கூறியது-67) 'கொலேயினிற் படுகரிக் குழிசியுட் கூழினுக் குலேயென க் குதிரையி னுதிரமே சொரிமினே (கூழடுதல்.18) இதேபோன்று மற்ற சீர்களேக் கொண்ட அடிகளிலும் சந்த வேறு பாட்டினேக் காணலாம். ஆக இந் நூலில் உள்ள 585 தாழிசை களில் அளவடி முதலாக 8 வகை அடிகளையும் ஒவ்வொரு வகை அடியிலும் பலவகைச் சந்தங்களாக மொத்தம் 35 சந்தங் களேயும் 15-1-4-13-4--9-1-1-1 = 351 பார்க் கின்ருேம். இனி நூல் முழுதும் ஆசிரியர் அடிக்கடி சீர்கள் வேறுபட்ட அடிகளே மாற்றிக் கொண்டு செல்கின் ருர். ஒரே எண்ணிக்கையுள்ள சீர் களைக்கொண்ட அடிகளைப் பயன்படுத்தும்போதும் அத்தகைய அடிவகையினுள்ளேயே சந்தம் வேறுபட்ட அடிகளைக் கையாளு கின்றர். அங்ங்னம் பார்த்தால் இந்த 585 தாழிசைகளில் ஏறத் தாழ 132 இடங்களில் சந்தத்தினை மாற்றுவதைக் காணலாம். சராசரியாக 4 அல்லது 5 தாழிசைகளுக்கு ஒருமுறை தாழிசை களில் சந்தம் மாறுகின்றது எனலாம். படிக்கின்றவர்களுக்கு சந்த மாற்றத்திலுைம், இனிய சந்தத்திலுைம், சோர்வு ஏற்படு வதில்லே. மேற்கூறிய கருத்தினைக் கீழ்க் கண்ட எடுத்துக்காட் டின் மூலம் தெளிவாகக் காணலாம். இந்நூலில் கடவுள் வாழ்த்து என்ற பகுதியில் 20 தாழிசைகள் உள. இத்தாழிசைகளில் 4, 6 7, 8 சர்களைக் கொண்ட அடிகளைக் காண்கின்ருேம். இவ்வடி களில் 6 சீர் அடிகளில் 2 வகைச் சந்தங்களையும் 8 சீர் அடிகளில் 446

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/453&oldid=743605" இலிருந்து மீள்விக்கப்பட்டது