பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிந்து, திறய்ைவுக் கருத்துக் களைப் புதுமை நெறியிலுணர்ந்து உணர்ச்சிமிக்க நாடகங்களே எழுதிப் பிறர்க்கு வழிகாட்டும் நாடக ஆசிரியர் ஆகப் பாரதிதாசன் திகழ வாய்ப்பிருந்திருக் கிறது. 0.2.3 நமிழ்நாட்டு நாடகங்களைக் கண்டு கவிஞர் வருந்தி ர்ை. ‘தமிழ்நாட்டு நாடகங்கள் பயனற்றவை, காதை மூடிக் கொள்ளும் வண்ணம் நாடகத்தில் தமிழ் இருந்தது; தமிழ் நாட்டில் நாடகத்தில் சம்பாதிப்போர் தமிழ்ப் பகைவர், கொள்கையற்ருேர் - என்ற முடிவுக்கு வந்தார். மற்ற நாட்ட வரோ நாட்டுப்பகை நீங்கவும், மனதில் புத்தொளி சேர்க்கவும், முடியாததை முடிக்கவும், பாராத காட்சி யைப் பார்க்கவும், பெரு நோக்கம் கொள்ளவும், பழமை நிலை நீங்கி நலம் சேர்க்கவும் நாடகம் அமைப்பர் (8) என்பர். எனவே, இக்கொள்கை சுளேயே தம் நாடகங்களின் அடிப்படைக் கருத்தாகப் பாாதிதாசன் மேற் கொண்டார் . 0 3.1. கவிஞர் எழுதிய நாடகங்களைக் (1) கண்ணுகர் நாடகங்கள் (2) செவி நுகர் நாடகங்கள் என இருவகையாகப் பகுக்கலாம். இன் பக் கடல்’ என்ற நாடகம் மட்டுமே இரண் டாம் பகுப்பில் அமைகிறது. எனவே, காட்சிப் புலத்திற்கே கவிஞர் நாடகம் முதன்மை தருகிறது. 0.3 2. பாரதிதாசன் சிறந்த கவிஞர் ஆதலால் கவிஞரின் நாடகங்கள் கவிதை வடிவில் அமையும் எனக் கருத இடமுண்டு. அதற்கு மாரு கப்பதினறு நாடகங்களில் ஒன்பது நாடகங்கள் உரை நடையிலேயே அமைந்துள்ள நிலே குறிப்பிடத்தக்கது . 0.3.3. புரட்சிக் கவிஞர் நாடகங்களில் சமூக நாடகங்கள் மிகுதியாக இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பதில் தவறில்லே. ஆயின் அரசமண ம் கமழும் வரலாற்றுப் பழங்க ருவே எட்டு நாடகங்களேக் கவர்கின்றன. அவற்றை மேலும் உண்மை வரலாறு (சத் திமுத்தப் புலவர், கழைக் கூத்தியின் காதல், சேர தாண்டவம் பிசிராந்தை யார்) கற்பனைப் பழம்பொருள் (வீரத்தாய், போர்மறவன், ஒன்பது சுவை, நல்ல தீர்ப்பு) என மேலும் பகுத் தால் ஆறு சமூக நாடகங்கள் (கற்கண்டு, பொறுமை கடலிலும் 456

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/463&oldid=743616" இலிருந்து மீள்விக்கப்பட்டது