பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிது, இன் பக் கடல், அமைதி, காதல் வாழ்வு, நல்லமுத்துக் க ைக) முதன்மை பெறுகின்றன. புராணம் என்ற நிலையில் ஒன்றும் (இரணியன்) வெறும் உரையாடல் என்ற நிலையில் ஒன்று மாக (அமிழ்து எது?) அமைகின்றன. நகைச்சு வைக் கென இரு நாடகங்கள் (கற்கண்டு, பொறுமை கடலிலும் பெரிது) மிகச் சிறந்த முறையில் அழைந்துள்ளன. இவை யாவற்றையும்விட அமைதி லும் உளமைநாடகம் தமிழிலக்கியத் துறையில் புது முயற்சி ஆகும். இத்தகைய நாடகங்களின் திறனே ஆய் தற்கு முழு நாடகத்தின் துணையைக் கொள்ளாது முதல் காட்சியை மட்டுமே எடுத்து க் கொள்கிறது. 1.1. பொதுவாக நாடகங்களைப் பகுக்கும் போது பெரும் பிரிவை அங்கம் என்றும், அதனுள் அமைந்த சிறு சிறு பிரிவு கA க் காட்சி என்றும் பகுப்பார். சேக்ஸ்பியர் தம் நாடகங் க8ள அங்கமாகப் பிரிக்கவில்லை எனப்பால்வின் கூறுவார்; பிரித்தார் என வில் கண் கூறுவார். பிரஞ்சு வழியை முன்ைேடி யாகக் கொண்டுபோய் காட்சி நிலைகளில் சில அமைப்புகளே ஏற்படுத்தினர் (9). நாடகத்தின் முதற்காட்சி ஒரு விளக்க உரை யாக அமையும். அதனைத் தொடர்ந்து சிக்கல்கள் சூழ நாடகம் உச்ச நிலையை எட்டும். இவைகள் நாடகத்தின் இயற்கைத் தேவைகள். இவற்றைப் பெரும்பாலான நாடக ஆசிரியர்கள் நிறைவேற்றுவர். அல்லது நின்ற வேற்ற முயல்வர். (10) 1.2. மேனுட்டு நாடக முதற் காட்சியை ஆய்ந்ததில்சிறப்பாகச் சேக்ஸ்பியரைத் திறய்ைவு செய்த கோல்ரிட்ஜ் போன்றவர்கள் முதற் காட்சியின் குறிப்பு நிலையைப் பல வகை யிலும் உரைப்பர். அது நாடகங் காண்போரை அந்நாடகத் தலைவனப் போலவே ஐயங்களிலும் குழப்பங்களிலும் ஆழ்த்தும். (11) நாடகத்தில் சூனியக் கலை போன்ற இன்றியமையாத ஆற்றலத் தேர்ந்தெடுக்கும் (12). ஒரே பார்வையில் காரண நிலையை வெளிக்காட்டி இறந்த கால நிகழ்கால முடிவுகளைக் காட்டும். (13) செயலைத் தூண்டி நாடகத்தின் உயிர்த்துடிப் பைக் கோடிட்டுக் காட்டும். இப்பண்புகளே யெல்லாம் ஒன்ரு கவே சேர்த்து ஹேம்லெட்போலத் தருதலும் உண்டு. (14) இவ்வாறு பாரதிதாசனும் தம் நாடகங்களின் காட்சி முறை 457

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/464&oldid=743617" இலிருந்து மீள்விக்கப்பட்டது