பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களேப் பிரஞ்சு முறைகளே ஏற்ற வண்ணம் கூட்டியும் குறைத்தும் கையாண்டிருக்க இயலும். எனவே இக் கருத்தினடிப்படையில் அவர் நாடக முதற் காட்சியைக் காண்போம். 2.1.1. முதற் காட்சியில் எழுகின்ற ஒசை நாடகத்தில் தனி யிடம் பெறுதலுண்டு. தனி மொழியின் பின் காலடி ஒசையிலும், (15) நூலேணியில் இறங்கிக் குதிரை எறிச் செல்வதிலும் (16) நாடக உணர்வு எழுகிறது. ஆட்டனத் தி ஆடும்போது காட்டுக் குயிலும் கடல் முழக்கமும் ஒத்து இசைத்ததுபோன்ற விளக்க முடியாத கூட்டிசை சேர்க்கிறது. (17) அரங்க மக்கள் ஆர்வத்தை ஈர்க் கச் சிறுத் தொண்டன் க ைதப்பாட்டு கற்கண்டின் முதற் காட்சியில் துணைபுரிவதுடன் இருபொருள்பட விளங்குகிறது. 2 1.2. முதலும் முடிவும் ஒரே காட்சியில் உரைக் கோவை யாக அமைந்து அமிழ்து பற்றிய கருத்து விளக்கம் தரவும் பயன் படுகிறது முதற்காட்சி. (18) 2 2.1. நாடக உறுப்பினர்க்குப் பேச்சின்றி, நிகழ்ச்சிகளைக் கண்ணுல் கண்டு கருத்தறியும் வண்ணம் அமைந்துள்ளது. சாவின் துக் கத்தை நட்ட தலேயும், நீர்வார் கண்ணேயும் கொண்டு (19) காட்ட முடிகிறது. நாடகத்தின் துன்பியல் முடிவை முற் படக் காட்டும் அறிகுறியாக இதன் முதற் காட்சி அமைகிறது. சமுதாய இழிநிலேயைக் குடிசையும். முன்னேற்றத்தின் தடை களே இழிந்த புல்லும், புதுமை உயிரோட்டத்தை வாய்க் காலும் காட்டுகின்ற பின்புலம் இக் காட்சியின் உள்ளுறைப் பொருளாக விளங்குவது குறிப்பிடத்தக்கது. இதன் வளர்ச்சியாக நாடக மாந்தர் பற்றிய குறிப்பின்றி உணர்வுப் பொருளே வெளியிடுவ தாகக் காதல் வாழ்வுக் காட்சி உள்ளது. (20) 2 2.2. சேரதண்டவ ஒற்றைக் கை வீரன் வரலாற்றை ஆடற்கலேயில் வடிக்கும்போது அத்தியின் காதல் வாழ்வில் நெயதலியை இழக்கும் நிலே யையும் (21) சோழ ஒற்றர் சிறைப் படுதல்போல் சேர இளவரசன் காதல் வலைப்படுதலேயும் (22) குறிக்கும். 2 2.3. இரணியனின் முதற் காட்சி மற்றெல்லா நாடகங்களே விடச் சிறப்பாக அமைந்துள்ளது. நாடகத்தில் வரும் பாடல் 458

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/465&oldid=743618" இலிருந்து மீள்விக்கப்பட்டது