பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகில் நாடகத் தோற்றமும் தமிழில் நாடக வரலாற்றுத் துவக்கமும் திரு. ஆறு. அழகப்பன் அண்ணுமலேப் பல்கலைக்கழகம் ஓவியம், சிற்பம், நாட்டியம், நாடகம் போன்ற கலைகள் நாடுகள் அனைத்திலும் உள்ள கலைகளாகும். நாடெங்கும் பொதுமையாகக் காணப்படும் நாடகக்க லேயின் துவக்கம் ஒரே காலத்திலும், ஒரேஎல்லேயிலும், துவங்கியதாக இல்லை; நாட்டிற்கு நாடு அவற்றின் அமைப்பும் வளர்ச்சியும் வேறுபட்டுள்ளன. இலக்கிய வடிவம் அமையும் பொழுது கடின உழைப்பையும் மேடை வடிவம் அடையும் பொழுது கூட்டுறவுக் கலேகளாகவும் மாறும், இக் கலேயின் பிறப்பும், வயதும் அழகும் பல்வேறு நாடு களில் எவ்வண்ணம் இருக்கின்றன என்று ஆராய்வது சுவைமிக்க வரலாறேயாகும். கிரேக்கம் : கிரேக்க நாட்டில் எலுளமினியின் (Eleusinian) етвёт до மதவிழாவில் ஆடிய நடனங்களில் இருந்து கிரேக்க நாடகங்கள் தோன்றியிருக்கின்றன. கி. மு. ஏழாம் நூற்றண் டிற்கு முன்பே இத் துவக்கம் ஏற்பட்டிருக்கின்றது. எழுபது சோக நாடகங்கள் வரை எழுதிய எஸ்சிலஸ், நாடகமேடையில் பல புதுமைகளைப் புகுத் திய சோபக் கிளஸா, மற்ருெரு சோக நாடகாசிரியர் யூரிப்பைட்ஸ் நகைச் சுவை நாடகங்களைத் தனிப்பட்டவர்களேத் தாக்கும் திசையில் திருப்பிய கிரேட்டினஸ் எள்ளல் நாடகங்களே இயற்றிய யூப்போலிஸ் இன்பியல் நாட கத்தைச் சரிவர உருவாக்கிய அரிஸ்டோபனிஸ் முதலிய நாடகப் 462

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/469&oldid=743622" இலிருந்து மீள்விக்கப்பட்டது