பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் இருந்தாலும் அவைகள் இன்று நாம் வழங்கும் பொருளி லிருந்து மாறுபட்டு நிற்கின்றன. பலருக்குக் கூத்து என்ருல் இன்றைய தெருக் கூத்து தான் நினே விற்கு வரும். ஆனல் பழந் தமிழ்க் கூத்து’ என்பது ஒரு பெரிய கலேயின் வரலாருகும். ஆங்கிலத்தில் (Dance) என்று குறிக் கப்படுவதே பழங்காலத்தில் கூத்து என்று அழைக்கப் பட்டது. தமிழகத்தில் நிலப் பாகுபாட்டிற் கேற்ப அவ்வந் நிலங் களுக்குத் தனித்தனியே கூத்தர்கள் இருந்தனர் என்பதையும் தனித் தனியே கூத்துக்கள் இருந்தன என்பதனையும் அறிகிருேம். சிலப்பதிகாரத்தில் இருவகை க் கூத்து என்றும், பலவகைக் கூத்து என்றும் கூறப்பட, அவற்றினே அடியார்க்கு நல்லார் விரித்து வகைப்படுத்திக் காட்டுவதனையே நாடகம் என்ற சொல்லாலும் அழைக்கின்றனர். இவ்வுண்மையினைப் பெரும்பானற்றுப் படை யில் வரும், " நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த விசி வீங்கு இன் னியங் கடுப்ப ’’ (56-6) என்ற வரிகளாலும், பட்டினப் பாலேயில், 'பாடல் ஒர்த்தும் நாடகம் நயந்தும்’ (113) என்ற வரியாலும் அறிகிருேம். புலவர் உருத்திரங் கண்ணணுரால் பாடப்பட்ட இவ்விரு பாடல்களில் உள்ள 'நாடகம்’ என்பது நாட்டியம் என்ற பொருளினே க் கொண்டதாகவே இருக்கிறது. சிலப்பதிகாரத்தில் உரைப் பாயிரத்தில் வரும், ' நாடக மேத்தும் நாடகக் கணிகை ' என்ற வரிக்கு எடுத்துக் காட்டாகவரும் மாதவியும், ஆடலரசி யாக உள்ளாளே தவிர நாடகப் பெண்ணுக இல்லே. இனித் தொல்காப்பியத்தில் (அகத் 56) குறிப்பிடப்படும் நாடக வழக்கு எதனே க் குறிக்கிறது என்று காண்போம். நடிப்பில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று கருத்துக்களே நடித்துக் காட்டுதல், மற்றென்று கதைகளே நடித்துக் காட்டுதல். கருத்துக்களே நடித்துக் காட்டுதல் “நாட்டியம்’ என்றும், கதை 465

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/472&oldid=743626" இலிருந்து மீள்விக்கப்பட்டது