பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களே நடித்துக் காட்டுதல் நாடகம்” என்றும் அழைக்கப்பட் டன. இவ்விரண்டினையும் பொதுவாகக் கூத்து’ என்றும் அழைத் தனர். o தொல்காப்பியத்தில் வாடா வள்ளி (நூற் 63) என்பதற்கு ‘ஒரு கூத்து’ என்று இளம் பூான ர் எழுது கிருர் முருகக் கடவுள் வள்ளியை மணந்த வரலாறே வள்ளிக் கூத்தின் கதையாக இருக்க வேண்டும். சிலப்பதிகாரத்தில் வரும் இருவகைத் கூத் துக்கள் சாந்திக் கூத்தும், விநோதக் கூத்தும் ஆகும் என்றும; சாந்திக் கூத்தைச் சொக்கக் கூத்து, மெய்க் கூத்து, அவிநயக் கூத்து, நாடக க் கூத்து என்று நால்வகைப்படும் என்றும்; இவற் றில் நாடகம்’ என்பதற்குக் கதை தழுவி வரும் கூத்து என்றும் அடியார்க்கு நல்லார் விரித்துரைப்பார். இக் கதை தழுவிய கூத்திற்குச் சிலப்பதிகாரத்தில் ' (மாதரி) மகளே நோக்கி மனமயங்காதே, மண்ணின் மாதர்க்க ணரியாகிய கண்ணகியும்தான் காண ஆயர் பாடியில் எருமன்றத்து மாயவனு டன் தம்முடன் ஆடிய வால சரிதை நாடகங்களில் வேல் நெடுங் கண் பிஞ்ஞையோடாடிய குரவையாடுதும் யாமென் ருள், கறவை கன்று துயர் நீங்குகவென் பவே’ (17 காதை) என வரும் பகுதியில் வாலசரிதை நாடகங்கள் என்பதற்கு, கண்ணன் தம் முனகிய பலராமனுடன் விளேயாடிய பாலசரிதை நாடகங்களுள், வேல்போலும் நெடிய கண்களேயுடைய நப்பின்னேயோடாடிய குரவைக் கூத்து” என்று உரையாசிரியர் எழுது கிறார். வள்ளிக் கூத்து, பால சரிதை நாடகங்கள் என்பன கதை தழுவிய கூத்துக்களாகவே இருந்திருக்கின்றன. எனவே, பழந் தமிழகத்தில் மேடை நாடகம் என்பது கதை ஒன்றினே நாட்டிய வடிவில் வெளிப்படுத்தும் ஒரு கலேயாகவே இருந்திருக்கிறது. இக் கலையின் வெளிப்பாடு, அல்லது தோற்றம் மேலே நாட்டில் காணப்படுவனவற்றுடன் ஒத்துள்ளது. மேலே நாட்டுப் பொம்ம லாட்டம் தமிழகத்திலும் உண்டு. குரவை, கலிநடம், குடக் கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவை முதலிய விநோதக் கூத்து என வகுத்திருந்தனர். இத்தோற்பா வைக் கூத்தின் 466

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/473&oldid=743627" இலிருந்து மீள்விக்கப்பட்டது