பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொறும் பரப்பிய தேரினராயினர். எனினும் எடுத்த எடுப்பில் பாரியை வெல்ல இயலாதவராய்ப் பறம்பு மலேயை முற்றுகை யிட்டனர். கபிலர் அவர் முன் தோன்றிப் பாரியின் அருமையும் பெருமையும் வீரமும் கொடையும் உள்ளிட்ட எல்லாப் பண்புகளே யும் எடுத்தியம்பினர்; பறம்பைப் பெறுதற்கு உரிய வழியையும் கூறினர். கபிலரின் சொல்லம்புகள் பாரியின் பகைவர் க்கு நல்லுனர் வளிக்கவில்லை. பகைவர் பாரியுடன் போருட ற்றினர் ; வென்றனர். பாரி மாய்ந்தான் . வாரி வழங்கிய வாரி வறண்டது. இயற்பெயரால் குறிக்கப் பெருமல் (கடந்த டு தானே) "மூவிரும்? என எண்ணும் பெயராற் குறிக்கப் பெறும் மூவர் யார்? பாரியைப் பற்றிய கபிலர் பாடல்களில் வரும் பனே கெழு வேந்தர்”, கடந்தடுதானே மூவிர்’ என்பன முரசு முழங்கு தானே மூவர் (35) விறல்கெழு தானே மூவர்’ (122) முந்நீரேணி விறல்கெழு மூவர் ’ (137 ) முற்றிய திருவின் மூவர் (205), பொதுமை சுட்டிய மூவர்' (357) என்னும் புறநானுாற்றுப் பகுதிகளுடன் ஒத்திருத்தல் கண்டு அறிஞர் சிலர் கபிலரால் சுட்டப்படும் மூவர் சேர சோழ பாண்டியரே என எண்ணியும் எழுதியும் உள்ளனர். இம் மூவர் முடிகெழு வேந்தராகிய மூவரே என்பதற்குரிய சான்றுகள் இருப் பதாகத் தெரியவில்லை. மூவர் என்ற சொல் ஒன்றைக் கொண்டே பாரியை எதிர்த்தவர் சேர சோழ பாண்டியர் எனக் கொள்வது பொருத்த முடைய தாகாது . பண் பிற் சிறந்த குறுநில மன்னன் ஒருவனே முடியுடை வேந்தர் மூவரும் ஒன்றுசேர்ந்து எதிர்த்து வென்றனர் என்பது அவ்வேந்தர்க்கே யன்றித் தமிழர் பண்புக்கும் பழிப்புத்தேடுவ தாகும். சிறுகுடியிலே தோன்றிய பண்ணன் பலர் பசிகளையும் பான்மை எண்ணி அவனுக்குப் பசிப்பிணி மருத்துவன்’ என்னும் சிறப்புப் பெயரீந்து, உண்டி கொடுத்து உயிர் காக்கும் பண்ணன் பல்லாண்டு வாழவேண்டும் எனக் கருதித் தன் வாழ்நாளை யும் அவனுக்களிக்க விழைந்து யான் வாழு நாளும் பண்ணன் வாழிய" எனப்பாடிய சோழப்பேரரசன் குளமுற்றத் துஞ்சிய கிள்ளி வளவன் தோன்றிய குடியில் பலர்க்கு நிழலாகிப் பழுமரமாக விளங்கிய பாரியைப் ப ைகத்து எதிர்க்கும் ஒருவன்-கூட்டுச் சேர்ந்து எதிர்க்கும் பண்பில்லா ஒருவன் தோன் றியிருக்க மாட் டான். அத்தகைய ஒருவன் சோழர் குடியில் இருந்திருந்தால் 470

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/477&oldid=743631" இலிருந்து மீள்விக்கப்பட்டது