பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண் கொ8ல புரிந்தமைக்காக நன்னனே பழித்துப் பாடும் இயல் புடைய புலவர் அங்ங் னமே சோழனையும் பழித்துரைத் திருப்பர். அங் வனமின் மையின் பாரியை எதிர்த் த மூவருள் சோழன் ஒருவன் அல்லன் என்ருகின் ருன் பாரியை எதிர்த்த மூவருள் சேரன் ஒருவகை இருந்திருப்பின் கபிலர் தம் இன்னுயிர் த் தோழனை பாரியைக் கொன்ற சேர நாட்டை நினைத்திருப் ரா? சேர நாட்டுக்குச் சென்றிருப்பாரா? சென்று சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பாடியிருப்பாரா? அவன் தந்த பரிசிலேப் பெற்றிருப்பாரா? பாரி இறந்த பின்னர்க் கபிலர் சேர&னப் பாடி யுள்ளாராக லின் பாரியின் பகைவர் கூட்டணியில் சேரன் ஒரு வகை இருத்தல் இயலாது. மூவர் என்னும் தொகைப் பெயரில் சேர சோழர் விலக் கப்பட்ட மையின் மூன்ருமவகிைய பாண்டியனும் அத்தொகையில் இல்லாதவன கின்ருன். ஆகவே மூவிர் என்னும் சொல்லால் குறிக்கப் பெறுவார் சேர சோழ பாண்டியராகிய மூவரல்லர் இவரின் வேறுபட்ட மூவராவர். அம் மூவர் யார்? பாரியை யொத்த முடிமன்னரல்லாத குறுநில மன்னரே அம்மூவராகல் வேண்டும். அங்ங்னமாயின் நன்னன் பழித்துரைக் கப் பட்டதுபோலப் பாரியைக் கொன்ற அம் மூவர் பெயரும் குறிக் கப்படாமல் பழித் துரைக்கவும் படாமல் புலவரால் விடப்பட்ட தேன்? எதிர் சென்று அவரை எதிர்த்துப் பாடிய கபிலர் பாரி மறைவுக்குப் பின்னர் அம் மூவரையும் பழித்துப் பாடியும் இருக்க வேண்டுமே. பழித்துப் பாடற் குரிய பொருளாகக் கொள்ளவும் கூட க் கபிலர் உள்ளம் இடந்த ரவில்லே போலும். அவர் களேப் பழித் துப் பாடாது இருக்கவும் இயலாமல், பழிக் காமல் இருக்கவும் இயலாமல் மிகச் சுருக்கமாகப் பாரியது அருமையறியார்’ (புறம். 116), பண்பில் பகைவர்’ (புறம். 120) எனப் பழித்துக் கூறுவதோடு அமைகின் ருர் அவர் . புலவர் பெருமாளுகிய கபிலரால் பழித்துப் பாடாது வரையப்பட்ட மூவரைப் பிற புலவர் எங்ங்னம் பாடுவர்? அதல்ைதான் அம் மூவர் பழித்துப் பாடப் பெறவில்லே. இது காறுங் கூறியவாற்ருல் பாரியை எதிர்த்தவர் முடியுடை வேந்தர் மூவர் அல்லர்; பெயர் தெரியாத குறுநில மன்னர் மூவரே யாவர் என்பது தெளிவாகும். 471

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/478&oldid=743632" இலிருந்து மீள்விக்கப்பட்டது