பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூளாமணியும் காப்பியத்தகுதியும் திரு. அழ. பழகியப்பன் அண்ணுமலேப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கிய உலகின் வழிபடு தெய்வங்களாக விளங்கும் இளங்கோ, வள்ளுவர், கம்பர் ஆகியோர் வரிசையில் வைத்து எண்ணத் தக்க வர்களில் சூளாமணி ஆசிரியர் தோலாமொழித் தேவரும் ஒருவராவார். சூளாமணி பெருங் காப்பியங்களின் வரிசையில் வைத்து எண்ணுதற்குரிய அனைத்துக் கூறுகளும் அமைந்து விளங்குகிறது என்ற அறிஞர் கருத்துக்கு நூலமைப்பில் அரண்கள் எவையேனும் அமைத் துள்ளனவா என்று அறியப் புகுவதே இக்கட்டுரையின் உட்கோளாகும். முதல் நூலும் வழிநூலும் : முதல் நூலொன்றே வழிநூலின் பெருமைக்கு வாயிலாகிவிட முடியாது. வழிநூலின் நிழலில் மறைந்து விடுகின்ற முதல் நூல்கள் பலலாகும். அந்த வகையில் தோலா மொழித் தேவர் தம் படைப்பாற்றல் திறத்தில்ை:முதல் நூல் ஆசிரியரை விழுங்கி ஏப்பம் விட்டுவிடுகிறர். சூளாமணியின் முதல் நூல் எது என்று அறியும் வேட்கை உள்ளத்தெழா வகையில் கவிஞர் தம்முடைய கவித்துவத்தால் நம்மை எல்லாம் மயங்கச் செய்துவிடுகிறர். தோலாமொழித் தேவரின் படைப்பாற்றல் ஒன்றே சூளாமணிக் குக் காப்பியப் பெருமையைக் கூட்டுவிக்கிறதென அறுதியிட் டுரைக்கலாம். காப்பியத் தகுதி : காப்பிய அமைப்புடன் கதைக்கரு ஆழமுடையதாக அமைய வேண்டும். சூளாமணியின் கதையும் கருவும் சிறக்கவில்லே 472

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/479&oldid=743633" இலிருந்து மீள்விக்கப்பட்டது