பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெறி பல்வகை ஆற்றல்களே விளைவிப்பதோடன்றிப் பேரின் பத் தையும் முடித்துக் கொடுக்க வல்லது என்பதை 'அதோ முக தெரிசனம்’ என்ற பகுதியில் திருமூலர் அமைத்துக் காட்டினர். அகத்தியம்’ என்ற தலைப்பில் அமைந்த இரண்டாவது செய் யுளில் அங்கியோகம் ஒன்றேயாயினும் இறைவன் மேற்கொள் வதற்கும் உயிர்கள் மேற்கொள்வதற்கும் வேறுபாடு உண்டு என் பதை விளக்குகிறர். இறைவன் இவ்வங்கி யோகத்துக்கு மூல மாகிய அங்கி உடலில் தாபித்த மூல காரண கைவும், அதைச் செய்து காட்டும் தவமுனிவகை வும் விளங்குகிருன். அங்கி உதயம் செய் மேல் பாலவ ைெடும் அங்கி உதயம் செய் வடபால் தவமுளிை’’ என்ற இரண்டு வரிகளும் இறைவனின் இருவேறு நிலே களேக் குறித்தன. அனைத்துச் சக்திகளுக்கும் மேற்பட்டவகை, ஆல்ை அனைத்துச் சக்திகளுக்கும் மூல காரண னு க இருக்கும் நிலே அவனுடைய மேல்பா லவனம் நிலை. அ புனே வடபால் திருக்' கயிலையில் எழுந்தருளித் தவமு னியாய் ச் செய்து காட்டுகின் ருன். இவ்விரு நிலைகளில் இறைவன் அங்கியை உதயம் செய் கிருன். தோற்றம் பெறச் செய்கிருன் ஆணு ல் அகத்தியனே அவ்வங் கியை மேலும் மேலும் வளர்க்கும் நிலே யைச் செய் கிருன். முன்னது பதிவலிமை, பின் னது உயிர்கள் உய்தி பெறும் பொருட்டு மேற்கொள்ளும் நிலையில் பசு வலிமை. இறைவன் பதிவலிமையாற் பற்பல செயல்கள் செய்து வீரட்டங்கள் படைப் பாதிகள் போன்ற தொழில்களைச் செய்து உலகைப் புரக்கிருன் , ஆனல் அகத்தியனே அவ்வகத்தி முறையால் அவ்வஞ்கியை வளர்த்து வளர்த்து உலகை வாழ் விப்ப வகை அமைகிருன். இவ்வளவே இவ்விருவருக்கும் உள்ள வேறுபாடு. அகத் தீ நெறியால் வளர்க்கப் பெறும் அருளெ எளியே உலகை விளக்கமுறச் செய்து வாழ்விப்பது என்பதை இரண்டாவது செய்யுளாற் சுட்டினர் திருமூலர். இத்தகைய அகத்தி நெறியே இலிங்கநெறி. அதுவே தமிழர் தம் பெருநெறியாக இருந்தது என்பதைச் சங்கச் செய்யுட்களாலும் பிற வரலாற்றுண்மை களாலும் நிறுவலாமாயினும் அதற்கு ஈது இடமன்று. 499

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/506&oldid=743664" இலிருந்து மீள்விக்கப்பட்டது