பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பாடல்களில் இயற்கை திருமதி தரணி பாஸ்கர் பூ. சா. கோ. அர. கிருட்டினம்மாள் மகளிர் கல்லூரி கோவை மக்கள் வாழ்வு இயற்கையோடு இயைந்தது. ஆடிவரும் தென்றலிலும், பாடிவரும் அருவியிலும், மணமிகு மலர்களிலும், கணந்தோறும் புதிய புதிய கோலங்காட்டும் வானத்தின் வண்ணத்திலும் ஈடுபடாத மனித மனம் இல்லை. ஆழ்வார்களுள் சிறப்பிடம் பெறத்தக் கவர் ஆண்டாள். இவர் பிற ஆழ்வார்களின் பக்திநெறியினின்று சிறிது வேறுபட்டு இறைவன வழிபட்டு அவரோடு கலந்தவர். இறைவன் மீது அவர் கொண்ட ஆழ்ந்த காதலே அவர் பாடல்கள் உணர்த்துகின்றன. அவர் பாடல்களில் இயற்கை சிறந்த இடத்தைப் பெறுகிறது. மார்கழி மாத விடியற் காலக் காட்சியைச் சொல்லோவியங் களாகத் திருப்பாவைப் பாடல்கள் காட்டுகின்றன. கண்ணனி டம் ஈடுபாடுகொண்ட ஆயர்கள் வாழும் முல்லே நிலப்பதியில் கீழ்வானம் வெள்ளென (திரு. 8) வெளுக்கிறது. பொழுது சிற்றஞ் சிறு காலே. (தி 28) மார்கழி மாதமாதலின் பனித்தலே (திரு 12) வீழ்கிறது. எருமைகளைச் சிறுவீடு மேய்வான் வேண்டி ஆயர்கள் ஒட்டிச் செல்கின்றனர். (திரு 8). கீசுகீசு என்று எங்கும ஆனே ச் சாத்தன் ஒலிக்க (திரு. 7) கோழிகள் (திரு. 18) கூவுகின்றன. புழக் கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்புகின்றன. (திரு. 13) மாதவிப் பந்தர் மேல் பல்கால் குயிலினங்கள் கூவுகின்றன. (திரு. 18). பறவைகள் பலவாறு ஒலிக்கின்றன (திரு. 6, 13). புள்ள ரையன் கோயிலில் வெள்ளே விளிசங்கின் பேரரவம் (திரு. 6) கேட்கிறது. காசும் 500

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/507&oldid=743665" இலிருந்து மீள்விக்கப்பட்டது