பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதலியவற்றால் தோடர்கள் மலபாரினின்றும் வந்திருக்க வேண்டுமெனக் கருதுகிருர். அதற்கேற்றாற்போல தோடர்கள் சாமியாடும் போழ்து மலையாள மொழியில் பேசுவதும் இறந்தபின் ஆவி மேற்குநாடு செல்லும் என்று நம்புவதும் சான்றுகளாகக் காட்டப் படுகின்றது பேராசிரியர் எமனோ (Emeneau) போன்றோர் மேற்கண்ட பழக்கவழக்கங்கள் இவர்கட்கு மட்டுமின்றி எல்லாத் தென்னிந்தியப் பழங்குடி மக்கட்கும் பொருந்தும் எனக் குறிப்பிடுகிறார். சிலர் இராவண பரம்பரையைச் சார்ந்தவர்கள் என்று கூறுகிறர்கள். இவர்களிடையே பல்கணவ மணம் வழக்கிலிருப்பதால் பஞ்சபாண்டவ வம்சத்தைச் சோந்தவர்களென்றும் கூறப்படுகிறது. அவர்களது நாட்டுப்பாடல்களிலும் பஞ்சபாண்டவ வம்சம் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. நீலகிரியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட புதை குழியிலிருந்து கத்தி, மணி, இரும்புக் கருவிகள் முதலியவற்றைக் கண்டுபிடித்துள்ளனர். கொண்டைபோட்ட மனித உருவச் சின்னமும் கிடைத்துள்ளது. பிணத்தோடு பாசிமணி முதலியவற்றைப் புதைப்பது புத்தமதத்தினரின் வழக்கம் என்று தெரியவருகிறது. மேலும் தோடர்கள் கருவிகளைப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. வில்லையும் அம்பையும் சடங்குப் பொருளாகத் தான் இன்று வரை பயன்படுத்துகின்றனர். தாமரை போன்ற வடிவுடைய கலைத்திறன் வாய்ந்த தட்டொன்றும் கிடைத்துள்ளது. இதனைக் குறித்துத் தொல் பொருளாய்வாளர்கள் நன்கு ஆராயின், மேலும் சில வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கக் கூடும் என பிரிக்ஸ் (Breeks) (1871) அவர்கள் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.[1]

உடலளவுகளைக் கொண்டு (Anthropometric data) தோடர்கள் “வடக்கு இண்டிட்” பிரிவைச் சார்ந்தவர்கள் என்று எய்க்ஸ்டெட் (Eickstedt) கூறுகிறார். மத்திய ஆசியாவைச் சார்ந்த தந்தை கால்வழிப் பிரிவைச் சேர்ந்த இந்தோ ஆரிய மொழி பேசுகின்ற பழங்குடிகளில் சிலர் இப்பிரிவைச் சார்ந்தவர்களாவர். டாக்டர் அய்யப்பன் போன்ற மானிடவியல் பேரறிஞர்கள் தோடர்கள் தொல்மத்தியத்தரைக்கடல் இனத்தைச் சார்ந்த


  1. Breeks J.W., An account of the Primitive Tribes and monuments of the Nilgiris, London 1873.

45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/53&oldid=1540200" இலிருந்து மீள்விக்கப்பட்டது