பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெறியிணைப் போற்றி வாழ்ந்தார் நின்றப் பயந்தார் தாங்கள் அறிவரும் பெருமை அன்பர் அமுது செய்தருளுதற்குச் சிறி திடை யூறு செய்தான் இவன்” என்று சிந்தை நொந்தார் என்பர் ஆசிரியர். --- இவ்வாறு மக்கள் வாழ்ந்திருப்பார்களா என்ற ஐயம் பலருக்கெழலாம். அவர்கள் தன்னை மறந்து தன் மைம் கெட்ட அளவில் கான் வாழ்க்கை நடத்தினர்கள். அவர்கள் செய்வ தெல்லாம் உலகினைக் கடந்த செயல்களே. சிவனடியார்களுக்குச் செய்யும் தொண்டே உலகிற் சிறந்தது என எண்ணினர்கள். இறை நெறியில் தான் அவர்கள் வாழ்வினை நாம் நோக்குதல் வேண்டும். பல அடியார்கள் இறைத் தொண்டில் தம் மனே வியர் குற்றம் செய்யின், அவர்களைத் தண்டித்தும் உள்ளனர். மேலும் சில அடியார்கள் செயற்கரிய செயலினே ச் செய்துள்ளனர். இயற் பகை யார் தம் மனைவியை அடியார்க் குக் கொடுத்தார். சிறுத்தொண்டரும், அவர் மனைவியாரும் இணைந்து அவர்களது மகனே வாளால் அறுத்து அடியார்க்கு பிள்ளைக் கறி சமைத்து விருந்தாகப் படைத்தனர். இவ்விருவரையும் பேரா. ச. வையாபுரிப் பிள்ளே அவர்கள், 'அடியார்கள் சரித்திரங்கள் பக்தி உணர்ச்சியை வளர்ப் பனவேயாயினும், அவற்றுட் பெரும்பாலானவை தற்காலத்து ஒழுக்க உணர்ச்சி யோடு மாறுபடுவதுடன், நமது மனங்கிளர்ந்து, அவற்ருல் இன்பமும பயனும் எய்த முடியாதபடி அமைந்துள்ளன. அன்றியும் இவை உயர்ந்த ஒழுக்க நெறியின் பாற் படுவன வென்று ஒரு காலத்து மக்களும் கருதார். சிறுதொண்டர் சரிதத் தி னில் பிள் ளேக் கறி சமைத்த செய்தி நம் மனதில் பெரிதும் அருவருப்பை உண்டு பண்ணுகிறது என்று கூறியுள்ளனர் (காவிய காலம், 138). இப்பேராசியர் கூற்றினே நாம் ஆய்தல் வேண்டும். இது செயற்கரிய செயலாகும். அக்காலச் சமுதாயத்தினர், பெண்கள் கணவன் வழி நிற்றல் கற்பின் திறம் என்று எண்ணி னர். இயற் பகையார் தன் மனேவியை நோக்கி, உனே இன்று இம்மெய்த் தவர்க்கு நான் கொடுத்தனன் என்று கூறியவுடன் அவர் மனைவி 57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/65&oldid=743683" இலிருந்து மீள்விக்கப்பட்டது