பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்ற பிள்ளே யை அறுத்தார். இதனைத் தான் வாழ்க்கையில் கொண்ட குறிக்கோள் அல்லது இலட்சியம் என்று கூறுகின் ருேம்.” இவ்வாறு நாயன்மார்கள் குறிக்கோள் வாழ்க்கை நடாத்திய தால் இருவருறவும் நன்முறையில் அமைந்திருந்தது. == உறவினர் நிலே அக்கால உறவினர்கள் நன் முறையில் தத் தம் உறவினர் களுக் குத் துணை புரிந்தனர். தம் இனத்தில் ஒரு வர் தவறு செய்யினும் அல்லது யாரேனும் இனத்தில் உள்ளவனேத் தாக்க வரினும், உடன் சுற்றத்தார் வந்து உத விர்ைகள். இயற்ப ைகயார் தம் மனே வியாரைச் சிவனடியார்க்குத் தரும் பொழுது, அவர்தம் சுற்றத்தார்கள் வெகுண்டு அவருடன் போராடு கின்றனர், மடிகின்றனர். அதிசூரன் ஏ ன தி நாதருடன் போரிடும் பொழுது, ஏ குதிநாதருடைய சுற்றத்தார்கள், மறப்படை வாள் சுற்றத் தார் கேட்டோடி வந்து ஏதிைநாதருக்காகப் போரிட்டார்கள். காரைக் கால் அம்மையார் புராணத்தாலும் சுற்றத்தார்கள் நற்செயலேயே செய்கின் ருர்கள். கோட் புலியார் சைவ சமய நெறிக்குப்புறம்பான செயலேச் செய்கின் ருர். இறைத் தொண்டிற்காக வைக் கப்பட்டிருந்த நெல்லே, உறவினர்கள் எடுத்து உண்டார்கள் என்பதற்காக, கோட் புலியார் உறவினர்களேயும், பால் குடிக்கும் குழந்தையை யும் சிவ சொத்துக் குல நாசம் என்று கூறி வெட்டினர். விருந்தோம்பல் இருந்தால் தான் இல் வாழ்க்கை சிறக்கும். நாயன் மார்களில் பத்துப்பேர்கள் சிவனடியார்களுக்குத் தொண்டு செய்துள்ளனர் . சாதி ஏற்றத்தாழ்வின் றி அனே வரையும் வர வேற்று விருந்து படைத்தனர். இளே யான் குடிமாற நாயனர் தம்மிடம் உணவில்லாத போழ்து, விதைத்த நெல்லேக் கொண்டு வந்து அடியவர்க்கு அமுது படைத்தார். மூர்க்க நாயனர் வறுமையுற்ற போழ்து சூதாடி வெற்றி பெற்று, அப்பொருளேக் கொண்டு அடியவர்க்கு உணவு படைத்தார். அரிவாட்டாயர், கண்ணப்பர் போன் ருேர் இறைவனுக்கே திருவமுது படைத் தனர். விருந்து படைக்குங்கால் வந்த அடியவரின் பாதத்தினை நாயன்மார்களும், அவர் தம் மனைவியர்களும் கழுவுவது 59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/67&oldid=743685" இலிருந்து மீள்விக்கப்பட்டது