பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலத் திருமண முறைக்கும் சேக் கிழார் காலத் திருமண முறைக்கும் பெரிதும் வேறுபாடு இருந்தது. ‘மாமுது பார்ப்பான் மறை வழி காட்டிடத் தீவலம் வந்து கோவலனும் கண் னகியும் திருமணம் செய்து கொண்டனர்” என்று இளங் கோவடிகளார் கூறியுள்ளார். சிலம்பில் இருந்த மண முறை தான் சற்று மேலோங்கிய நிலையில் பெரிய புராணத்தில் காணப் படுகிறது . ரத் தையர் கூட்டம் பரத்தையர் என்பவர் சங்க காலத்தினின்று நம் தமிழகத் தில் இருந்து வருபவராவர். இடைக் காலச் சோழ மன்னர்கள் பதியிலார் குலத்தோ ரா கிய தேவரடியார்களைக் கோயிலில் பணிபுரிய அமர்த்தினர். பெரிய புராணத்தில் பரத்தையர் பற்றிய குறிப்பு மிகுதியாக இல்லை. உருத்திர கணிகை மாராம் பதியிலார் குலத்துள் தோன்றிய பரவையா ரைச் சுந்தரர் மணந்து கொள்கின் ருர். இதல்ை பரத்தையரும் குடும்பப் பெண்டிர் ஆயினர் என்றறி கின் ருேம். பரத்தையர் தொடர்பால் குடும்பவுறவு கெட்டதை நாம் திரு நீலகண்டர் வரலாற்ருல் அறியலாம். இது காறும் பெரியபுாரணம் காட்டும் அக் காலக் குடும்ப நிலையினே ஒரளவு கண்டோம் . 6 i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/69&oldid=743687" இலிருந்து மீள்விக்கப்பட்டது