பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுள்ளவள் என்று கூறு தற்குரிய சான்றுகள் உள்ளன. இச் சொற்ருெட ரால் பெயர் வழங்கப்படாவிட்டாலும் இன்றும் அகவன் மகளிர் இடத்தைப் பெறும் மகளிர் உளர். தமிழ் இலக் கியங்கள் வாயிலாக அகவன் மகளிர் இயல்பு, வாழ்க்கை முறை, வரலாறு ஆகியவற்றை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம். இம்மகளிர் சங்க இலக்கியத்தில் பல் வன கப் பெயர் களால் குறிக்கப்படுகின்றனர். குறுந்தொகையில் அகவன் மகளிர் எனப் பெயர் பெற்றுள்ள அவர்கள் அகநானூற்றில் முது வாய்ப் பெண் டிர் (அகம் 22, 98) எனவும், பொய்வல் பெண்டிர் ( அகம் 98) எனவும் நற்றினேயில் செம்முது பெண்டிர் (நற் 288), எனவும் குறிஞ்சிப்பாட்டில் அறியு நர் (குறிஞ்சிப் பாட்டு. 4) எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளனர். அகவல் அழைத்தல்; அகவிக் கூறுதல் எனப் பொருள்படும். கடவுளரை அழைத்துக் கூறும் இயல்பினள் ஆதலின் இப்பெயர் பெற்ருள். அகப்பாடல் சிலவற்றில் இவள் இனத்தவர் ‘அகவுநர்’ (அகம், 152, 208) என்று குறிப்பிடப்படுவதும் இவண் நோக்கத் தக்கது. முது வாய்ப்பெண் டிர் என்பது அவர்கள் முதுமைப் பருவம் எய்தியவர் என்றும், பேசி முதிர்ந்த வாயினே உடையவர் என க் கொண்டு சொல்லாற்றல் மிக்க வர் என்றும் கொள்ள இடந்தருகின்றது. உண்மையினே அறிந்து கூறுதல் மாட்டாதவர் ஆதலின் பொய்வல் பெண் டிர் என வும் இலக்கியங்களில் பெயர் பெற்றுள் ள ர்கள். அறியுநர் என்பது பின் நிகழ் வதனே அறி கின் மவர் எ ன் பதைக் குறிக் கலாம். அறியுநர் என்பதற்கு நச் சி கறர்க் கினியர் கட்டிலுைம் கழங்கினலும் எண் ணியறி வார்’ என உரை விளக்கம் தருகின் ருர் தொல்காப்பியனர் , கட்டினும் கழங்கினும் வெறியென விருவரும் ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும் (தொ. பொ. 115) என்று கூறுகின்ற அடிகட்கு நச்சினர் க் கினியர் கட்டுவிச்சியும் வேலனும் தாம் பார்த்த கட்டிலுைம் கழங்கினுலும்” என்று D_ 6) IT கூறு வது இம்மகளிர் கட்டுப்பார்த்தறியும் ஆற்றல் பெற்றவர் என்பதனையும் தொல் காப்பியனர் காலத்திலேயே அம்மகளிர் கட்டுப்பார்க்கும் வழக்கம் உடையவராக இருந்தனர் என்பதனையும் தெளிவுபடுத்தி நிற்கின்றது. 63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/71&oldid=743690" இலிருந்து மீள்விக்கப்பட்டது