பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகவன் மகளிர் இயல்புகள் சங்க இலக்கியச் சான்றுகள் வாயிலாக அகவன் மகளிர் இயல்புகளே நன்கு அறிதல் இயலும். இவர்கள் பாடன் மகளிர் என்பது வெள்ளிடை மலே. இவர்கள் சங்ககால இசைக் குலத்தைச் சார்ந்தவரர் யிருத்தல் வேண்டும். எனவே பாண் மகளிர் இனத்தவர் எனக் கொள்ளுதல் தகும். இவர்கள் புரவலர்களது நாடு, மலே, குன்றம் ஆகியவற்றைப் பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்தனர் (குறு.23). மலே, குன்று ஆகியவற்றை மிகுதியும் பாராட்டிப் பாடும் மரபினர்; எனவே மலே வாழ் மக்கள் எனக் கருத இடம் உள்ளது . இவர்கள் சங்குமணிகளாகிய அணி கலன்களை அணிந்தவர் (குறுர் 23). கையில் வெள்ளிய முனையை யுடைய சிறிய கோலேக் கொண்டிருப்பர். அக்கோல் வெள்ளியாற் செய்த பூண் கட்டிய நுனியை யுடையது (குறு. 298). "வெண் கடைச் சிறுகோல் அகவன் மகளிர் என்று குறுந்தொகை குறிப்பிடுகின்றது. அகவன் மகளிர்க்குரி ப தொழிலில் ஈடுபடும் பாண்மகளிர் முதுமைப் பருவத்தி னராக இருந்தனர் என்று தெரிகின்றது. இவர்களேச் செம்முது பெண் டிர்’ என்று நற்றிணைப் பாடலும், முதுவாய்ப் பெண்டிர் என அகநானூற்றுப் பாடலும், * மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தலே யு ைடயர் ’ எனக் குறுந்தொகைப் பாடலும் குறிப்பிடுவது நரைமூதாட்டியர் என்பதைத் தெளிவுபடுகின்றது (நற். 288). தொழில் அகவன் மகளிர் மலேவளம் பாடுகின்றவர்கள் ; தெய்வங்களே அழைத்துப் பாடுகின்ற வர்கள் , கட்டுப் பார்க்கின்றவர்கள்; அதாவது தெய்வம் ஏறிக் குறி கூறுகின்றவர்கள்; ஊர் உள ராய் ச் சுற்றித்திரிபவர்கள்; அவர்கள் கு ைரவைக் கூத்து நிகழ்த்து தலும் உண்டு. அவர்கள் பாடி மடப்பிடியைப் பரிசிலாகப் பெறுவர். கட்டு காணல் கட்டு என்பது முறத்தில் நெல்லே வட்டமாகப் பரப்பி வைத்துத் தெய்வங்க ளேப் பாடி எண்ணிப் பார்த்துக் கட்டுவித்தி காணும் குறி; நிகழ்வதனைச் சொல்லும் குறி என்பாரும் உளர். 64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/72&oldid=743691" இலிருந்து மீள்விக்கப்பட்டது