பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இம்மகளைப் பெரு திருந்தாளாயின் இப்போர் நிகழ்ச்சிக்கேது வின்ரும் என்பதுபற்றிப் பண் பில் தாய்” என்று குறிப்பாக உணர்த்துகின் ருர். புறம் 348-ல் 'குவளே உண்கண் இவளே, தாயே ஈளுளாயினள் ஆயின்”, எம்மூர்ப்பெருந்துறைக்கண் நின்ற மரங்கள் வேர்துளங்கிப் பெரிதும் கெடக் கூடிய இந் நிலே வந்து அமையாது என்று பாடுகிருர் . ஒரு அரசன் மாற்றரசன் ஒருவனிடம் தானே நேரடியாக வந்து அவன் மகளை மணம் செய்து தருமாறு கேட்க , மகளே மணம் முடித்துத் தர மறுத்து விடுகிறன். இருவருக்கும் மிக்க கோபம் எழ, போர் மூண்டது. பெண்ணின் தந்தை போர்க்கு முயற்சிகள் அனைத்தையும் மேற்கொண்டு களம் புக் கனன். பெண் கேட்டு வந்த குருசிலோ, "அவளோடு நாளே மணம் புகு வைகல் ஆகுதல் ஒன்ருே-ஆர் அமர் உழக்கிய மறங்கிளர் முன் பின் நீள் இலே எஃகம் மறுத்த உடம்பொடு வாரா உலகம் புகுதல் ஒன்று” என வஞ்சினம் கூறித்தன் படையைக் கையிலேந்தின்ை. வீரம் மிக்க அரசர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் போர் செய்யக் கருதினல் கடும்போர் நிகழ்தல் ஒருதலை என்பதும் அதல்ை உயிர்ச்சேதமும், பொருள்கேடும் உண்டாதல் உறுதி என்பதும் உணர்ந்த நிலையில் பரணர் இரங்கிப்பாடு கிறார். கபிலர் தனது பாடலில் (புறம் 337) மிகுந்த ஆரவாரத்தை உடைய சோழநாட்டுத் தலைவன் ஒருவனுடைய எழில் நலம் முதலியவற்றை விளக்கிக் கூறி இவள் தந்தை இவள் உடன் பிறந்தோர் முதலியோருடைய வீரத் தன்மையைப் புகழ்ந்து கூறி இவளே மணந்து கொள்ளும் பேறு பெற்ற அரசர் யாவரே என்பதை அறிய வேண்டும் என்று கூறுகிறர். இங்ங்னம் கூறுவதால் இவளைப் பலர் பெண் கேட்டு வருகிருர்கள் என்பதும், உடன் 72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/80&oldid=743700" இலிருந்து மீள்விக்கப்பட்டது