பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எச்சம் திரு. ஆ. சிவலிங்கனர் மயிலம் 6T ՅF ՅԲ ԼԸ எச்சம் என்பதற்குக் குறை’ என்பது பொருள். குறை? என்பதற்குச், செய்து நிறைவேற்றப்பட வேண்டுவது” என்பது பொருள் (குறள் 674, பயக் குறை-புறம்). குறை-நிறைவேற்றப்பட வேண்டுவது-முடிக்கப்பட வேண் டுவது என்ற பொருளில்தான் இலக்கண நூலாரும் எச்சம் என்ற சொல்லேக் கொண்டனர். ஒரு தொடரில் உள்ள சொற்கள் முடிக்கப்படும் சொல், முடிக்கும் சொல் என அமையும். 'உண்டு வந்தான்’ என்ற தொடரில், உண்டு’ என்பது முடிக்கப்படும் சொல். 'வந்தான்' என்பது அதை முடிக்கும் சொல். உண்டு’ என்று நிறுத்தினுல் அச்சொல் குறையுடையதாகும். அது எதைக் குறையாக தன்னை முடிப்பதாக-எதிர் நோக்குகிறது என்ருல் வந்தான்’ என்பதையாம். வந்தான்’ என்பது எச்சம் எனப்படும். ஆனல் 'உண்டு வந்தான்’ என்பதில் எச்சம் எது என்று கேட்டால் யாவரும் உண்டு’ என்பதே என்று கூறுவர். ‘புலவர் என்பது ஒரு பட்டம். அதனை உடையார்மேல் ஏற்றிப் புலவர் வந்தார், என்பதுபோல எச்சத்தையுடையதனை எச்சம் என்று வழங் கினர் இலக்கண நூலார். s 77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/85&oldid=743705" இலிருந்து மீள்விக்கப்பட்டது