பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முதற் காப்பியத்தின் முரண் தொடை


--- டாக்டர். க. ஆறுமுகன்
தில்லிப் பல்கலைக்கழகம்

கவிஞன் கற்பனைச் சிறகுடையவன். காலம் என்னும் வானில் பறந்து செல்பவன். பல மைல்களுக்கப்பால் பறந்து செல்லும் பறவை போல் பல்லாண்டுகளுக் கப்பால் கற்பனைச் சிறகு கொண்டு பறந்து செல்கிறான். மாந்தர் விலங்கு பறவை முதலிய உயிர்களின் இயல்புகளை மாற்றி முரண்படுத்திப் புதியதோர் உலகம் காண்கின்றான், வறியரும் செல்வருமாய் வாழும் மண்ணுலகைப் பொன்னுலகாய் மாற்றி இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ என்று பாடியாடுகின்றான். விலங்குகள் திரியும் காடுகளை அழித்து இன்ப நாடுகளாக்கிப் பிடியூட்டிப் பின்னுண்ணும் களிற்றுக் காதலர்களை ஆண்டுக் காண்கின்றான். கொடிய விலங்குகளுக்கு அன்பும் அமைதியும் ஊட்டி உருமும் உரறாது அரவும் தப்பா காட்டுமாவும் உறுகண் செய்யா என்று கூறி, அஞ்சி அஞ்சிச் சாவும் மாந்தர்க்கு அபயம் அளிக்கின்றான். “இது தான் இதன் இயல்பு” என நாம் கருதும் பலவற்றையும் இங்ஙனம் இனிதாக மாற்றித் தான் கருதியவாறு முரண்படத் தொடுத்து அம்முரண்பாட்டில் ஓர் இன்பம் ஊட்டுகின்றான்.

இளங்கோவின் காலம்

இளங்கோவடிகள் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் வாழ்ந்தவர். சமுதாயத்தில் பல பல குறைபாடுகளைக் காண்கின்றார். அக்குறைபாடுகளே நல் இயல்புகளாய் எண்ணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/9&oldid=1426396" இலிருந்து மீள்விக்கப்பட்டது