பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"எஞ்சிய மூன்றும் மேல் வந்து முடிக்கும் எஞ்சு பொருட் கிளவி யில்லென மொழிப” (தொல். சொல். 439) "அவைதாம், தத்தம் குறிப்பின் எச்சம் செப்பும்” (தொல். சொல். 44 ) என்ற நூற்பாக்கனேக் காண்க. இவர் கூற்று எப்படிப் பொருந்தும்? விஜனயெச்சம் பெயரெச்சம் ஆகியவை வெளிப்படையில் எச்சச் சொற்களே (முடிக்கும் சொற்களே) யுடையன. மற்றயவை குறிப்பாகவே கொள்ளவேண்டுவன. அப்படியாகக் குறிப் பெச் சம், இசையெச்சம் சொல்லெச்சம் ஆகியவை மட்டும் முடிக்கும் சொல் இல்லாதன என்று எப்படிக் கூறலாம்? (பிரிநிலை எச்சம் என்பது இளம்பூரணம் கொள்கைப்படி முடிக்கும் சொல் உள்ளதே). வெளிப்படாதிருக்கும் சொற்களைக் கொண்டு வந்து கூட்டி முடித்தல் என்பது பிரிநிலை முதலியவற்றுக்கிருப்பது போலவே சொல், குறிப்பு இசை எச்சங்களுக்கும் இருத்தலின் அவற்றை முடிக்கும் சொல் இல்லை என்பது பொருந்தாது. பிரிநிலை முதலிய வற்றுக்கு ஒரு சொல்லோ பல சொற்களோ எஞ்சியிருப்பது போலவே இசை குறிப்பு எச்சங்களுக்கும் பல சொற்கள் ஒரு தொடர்க் கருத்தாக இருந்து எச்சமாகி முடிக்கும் சொற்களாக அமைகின்றன. எனவே ஆசிரியர் கூறியது எக்கருத்துபற்றியோ? எல்லாம் எச்சம் எச்சம் என்பது முடிக்கும் சொல். نیم الاقیے( முடிக்கப்படும் சொல்லுக்காயிற்று. 'உண்டுவந்தான்’ என்பதில் வந்தான் ? என்பது எச்சம். அதல்ை முடிக்கப்படுவது உண்டு’ என்பது. இது பிறகு எச் சம் எனப்பட்டது . இவ்விலக் கணத்தைக் கொண்டு பார்த்தால் எல்லாத் தொடர்ச் சொற்களுமே (இறுதிச் சொல் தவிர) எச்சங்களாம். சாத்தன் வந்தான். இது எழுவாய்த் தொடர், சாத்தன் என்பது தனி நிலையில் கூறில்ை ஒருவன் பெயர். யாரும் தனிப் 84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/92&oldid=743713" இலிருந்து மீள்விக்கப்பட்டது