பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயரைக் கூறமாட்டார்கள் . சாத்தன் என்று சொல்லி நிறுத் தினுல் உடனே என் ன செய்தான் என்பது போன்ற விை எழும். அதல்ை அச்சொல் இன் குெரு சொல்லே அவாவி நிற்கிறது என்பதாம். அதாவது இன்னெரு சொல்லால் முடிக் கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறதாகும். அப்படியால்ை “வந்தான்' என்பது அதை முடிக்கும் சொல்லாகிறது . எனவே * சாத்தன் என்பதற்கு வந் தான் என்பது எச்சம். அவ் வெச் சத்தால் முடிக்கப்படும் சாத்தன்' என்பதும் எச்சமாம். “வந்தான் சாத்தன்',. இது வினைமுற்றுத்தொடர். 'வந்தான்’ என்று தனித்துச் சொன் னுல் யார்’ என்ற கேள்வி வரும். விடை சாத்தன் ஆகும். எனவே வந்தான்’ என்பதை முடிப்பது "சாத்தன். சாத்தன் எச்சமாகும். அவ்வெச்சத்தால் முடிக்கப் படும் வந்தான் என்பதும் எச்சமாகும். இந்த அடிப்படையில் தான், வந்தான் போனன்” என்ற தொடரில் வந்தான்’ என்பது (முற்று) எச்சம் எனப்பட்டது போலும். வந்தான் ’ என்று நிறுத்தினுல் பிறகு என்ன செய்தான் என்ற வி ைவரும் போது போனன் என்று சொல்லவேண்டுவதாகும். அப்படி யானுல் போனன்” என்ற எச்சத்தால் முடிக் கப்படுவது “வந்தான்’ என்பதாகும். எனவே அதுவும் எச்சம். இப்படியே ஒரு நீண்ட தொடரில் உள்ள சொற்களேயும் நாம் எச்சங்கள் என்றே கருதவேண்டும். முடிப்பு இதுகாறும் கூறியவாற்றல் ஒரு தொடரில் உள்ள முடிக்கும் சொல் எச்சம் எனப்பெறும் என்பதும், பின் அது அதல்ை முடிக்கப்படும் சொல்லுக்கு வழங்கியது என்பதும், எச்சம் பத்து வகையின என்பதும், பத்துவகைக்கு மேலும் தேற்ற எச்சம் விரு எச்சம் முதலியவாக எச்சங்கள் கூறப்பட்டிருக்க வேண்டும் என்பதும் பெயர் வினை இடை (உரி) எல்லாச் சொற்களுமே தொடரில் வருங்கால் ஒன்றையொன்று அவாவியும் முடிக்கப் பட்டும் நிற்றலின் எச்சங்களாகும் என்பதும் பெறப்படும். இவ் வெச் சங்கள் மேலும் தனித்தனி ஆராயப்படும். 85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/93&oldid=743714" இலிருந்து மீள்விக்கப்பட்டது