பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலமகளும் நிலமகளும் திரு. செ. வைத்தியலிங்கன் அண்ணுமலேப் பல்கலைக்கழகம் கலேக் கற்பனையுடன் ஒட்டிய காப்பியச் சிந்தனைகளால் மக்கள் தங்கள் நல்லுணர்வுகளையும் சிந்தனைத் திறத்தையும் வளர்த்துக் கொள்ள வாய்ப்பினைப் பெறுவர்; பண்பாட்டுச் சூழலில் செயற்பட்டுச் சிறக்கவும் உள்ளத்தெழுச்சியை முறையே பெறுவர். அந்த அடிப்படையிலே சிலப்பதிகாரக் காப்பியத்துள் சிறிது சிந்தை செய்வோம். சோழ வளநாட்டிலே நற்குலமும் நற்குடிப்பிறப்பும் கொண்ட வணிகன் மாநாய் கனுக்கு அருமை மகளாகத் தோன்றுகிருள் கண்ணகி. ஒத்தகுலமும் குடிப்பிறப்பும் கொண்ட மாசாத்துவன் மகளுகிய கோவலனுக்குக் கண்ணகி ஊரார் காண வாழ்க்கைப் படுகிருள். இக் குறிப்பில் மாநகர்க்கீந்தார் மனம்’ என இளங் கோவும் கூறிவிடுகிருர் ஊழ்வினே காரணமாக க் கோவலனும் கண்ணகியும் இல்லறமாகிய நல்லறம் இனிது நடாத்தி ஊர் மெச் ச வாழ முடியவில்லே. அஃதாவது, குலக் கொடியாகிய கண்ணகிக்குக் கொழுகொம்பாக நன்கு வாழாமல் விலே மகள் குலத்திலே தோன்றிய மாதவி நங்கையுடன் களிப்புற்றுச் சுழலுகிருன் கோவலன். தன் இனத் தோண்டுபவரையும் போற்றித் தாங்கி நிற்பாள் நிலமகள்; அவளேப் போலவே தன்னே இகழ்ந்து (மாதவியுடன் போற்ரு வொழுக்கம் புரிந்து) வாழ்ந்திடும் கணவனைப் போற்றிப் பொறுத்து நிற்கிருள் குலமகள் கண்ணகி. ஆடல் பாடல் அழகு நாட்டத்துடன் சுழலும் கணவனது இன்பத்திற்காகத் தன்னைத் 86

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/94&oldid=743715" இலிருந்து மீள்விக்கப்பட்டது