பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்ணகமடந்தை முன் கூட்டியே யறிந்து மயக்கமுற்றிருப்பது போன்று காட்டும் இளங்கோவடிகளின் கவித்திறம் ஈண்டும் புலப்படுகிறது. மேலும், பொதுவாக மண்ணக மடந்தையின் மயக்கத்தைத் தீர்க்க முயலுகிருள் கண்ணகி; ஆல்ை அவளது துன்பத்தை ஒருசிறிதும் போக்க இயலாதவளாகிருள், இல்லை. (முன் கூட்டியே தெரிந்திருந்தும் ஊழின் நியதியிலே) முயலாதவ ளாகிருள் மண்ணக மடந்தை. கணவனே கண்கண்ட தெய்வ மாகக் கொண்ட கண்ணகி, கோவலனது போற்றவொழுக்கத் தைத் தெரிந்தும் கடுத்து நிறுத்தவில்லை. அதுபோல, மண்ணா கக் காவலறைகிய பாண்டியனது தேராத செயலேத் தெரிந்தும் தடுத்து நிறுத்தவில்லே மண் னக மடந்தை. ஊழின் திருவிளே யாடல் இது 1 * - 5. கருணை மறவருகிய கோவலன், பாண்டியன் கட்டளைக் கிணங்கக் கல்லாக் களிமகன் ஒருவல்ை கொலே செய்யப்படு கிருன்; பொங்கி யெழும் கண்ணகியின் கண்ணிரானது நில மகளின் மேனியை மெழுகு தற்கு முன்னமே, வெட்டுண்ட கோவலனின் குருதிச் செந்நீர் கொப்புளித்துப் பாய்ந்து பரவி மெழுகிவிடுகின்றது: இங்குக் கணவனே யிழந்த காரிகையாகிய கண்ணகியே நேரடியாகப் பாதிக்கப்பட்டவள்; அவளுக்குப் பற்றுக்கோடாக உலகத்திலே காட்டப்படுவது எதுவுமே இல்லே தான்! என்ருலும், அவளுக்கும் முன்னதாக நிலமகள் பாதிக்கப் படுகிருள்; துன் பத்திலே பங்கு கொள்கிருள்; துடி துடித்துத் துவண்டு பெருந்துயருறுகிருளாம்! இதனை இளங்கோ, கல்லாக் களிமக ைெருவன் கையில் வெள்வா ளெறிந்தன ன் விலங்கூ டறுத்தது புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப மண்ணக மடங்தை வான்றுயர் கூர எனக்கூறி அவலச் சித்திரம் தீட்டு கிருர். 6. மண்ணகத்தை நல்லாட்சியால் குளிரவைக்கவும் பகைப் புலத்தே வீரத்தால் வெற்றி விளைவிக்கவும் கருவியாவது வேற் 91

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/99&oldid=743720" இலிருந்து மீள்விக்கப்பட்டது