உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
93



“துதிக்கையினாற். பஞ்ச மலங்காய்ந்த சிவஞானக் கடாக்களிறு” என்பன அவ்வரிகள், (கந்தர்கலிவெண்பா 70 ஆவது கண்ணி காண்க.)

“சிவபெருமான் எவர்க்கும் பொது” என்று சொல்ல விழைந்த ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள், திருவாரூர் நான்மணி மாஜல செய்யுள் 23-ல், “எல்லார்க்கும் பொதுவில் நிற்கும், மதுவேய் மலர்ப்பொழில் ஆரூரினும் வைகும்” என்று கூறுகிறார். இதில் பொது என்பது சிதம்பரத்தையும் ஆரூர் என்பது திருவாரூரையும் த்வனிப் பொருளில் அமைத்து, இறைவன் பொதுவாக நிற்கும் என்றும், யாருடைய ஊரிலும் (ஆர்ஊரிலும்) தங்கும்’ என்றும் பொருள் தோன்றுமாறு அமைத்தார்.

இங்ங்னம் காட்சியளவை அல்லது செவியளவையில் சொற்கள் அமைத்துப் பொருள் அளவில் தாம் கருதிய பொருள் பொருந்துமாறு திருவானைக்கா உலாவில் சில வரிகள் அமைந்துள்ளன. அவ்வரிகள் வருமாறு:–

“ஆதிரையான் மூல மறையத்தத் தர்ன்மகத்தான்

ஓதமெறி நாகைக்கா ரோணத்தான் சோதியான்”

இவ்வரிகளில் ஆதிரை மூலம் அத்தம் மகம் ஒனம் சோதி என்ற நட்சத்திரப் பெயர்கள் தொனிக்கின்றன.

ஆதிரை நட்சத்திரத்துக் குரியவன்; பழைய வேகத்தின் முடிவில் இருப்பவன்; (அந்தத்தான் என்பது வலித்தல் விகாரம் பெற்று அத்தத்தான் என்றாயிற்று); யாகத்துக்குத் தலைவன்; அலைகள் வீசும் நாகைக்காரோணம் (நாகப்பட்டினத்தில்) இருப்பவன்: ஒளிபொருந்தியவன் - இதுவே அவ்வரிகட்குரிய பொருள்.

பின்வரும் அவ்வுலா வரிகளில் ஆடி முதல் பன்னிரண்டு மாதங்களின் பெயர்களும் தொனியினால் குறிக்கப்பட்டுள்ளன்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/100&oldid=1389109" இலிருந்து மீள்விக்கப்பட்டது