பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
98

கோடீச்சுரக் கோவையில் காணப்படும் தொனிகளைப் போல வேறு எந்தத் தமிழ்நூலினும் காண்டல் அரிதாம். கோடீச் சுரக்கோவையில் கண்ட தொனிகள் சில இனிக் காணப்பெறும் :

மும்மூர்த்திகளின் பெயர்கள் “மாலாய உன்னே உருத்திர குமென்பர் மற்றயனே” என்ற வரியில் (செ. 115)தொனிக்கக் காணலாம். ‘மயக்கம்பொருந்திய உன்னே அழித்தல் தொழிலேயுடையவன் என்று கூறுவர் ஐயனே’ என்பது பொருள்(மால் மயக்கம்; உருத்திரன் - அழித்தல் தொழிலையுடையவன்; அயனே-ஐயனே).

தேவார மூவர் பெயர்கள் பின்வரும் பாடலில் (செ. 424) அமைந்துள்ளன:

வெற்றிகொள் மால்விடைக் கோடீச் சுரவள்ளல் வெற்பனைய
மற்றி தோளுடைச் சுந்தரர் ஆனநம் மன்னவர் நூல்
பற்றிடு வாக்கர (சு) ஆகிமெய்ஞ் ஞானசம் பந்தர் பதம்

பெற்றிட எண்ணிப் பிரிந்தாரின் (று) ஓதப் பிறைநுதலே.

இதில் சுந்தரர் என்பது அழகுடையவர் என்ற பொருளிலும், வாக்கரசு என்பது நாவலர் என்ற பொருளிலும், மெய்ஞ் ஞானசம்பந்தர் என்பது உண்மையறிவொடு பொருந்தியவர் என்ற பொருளிலும் வந்து தேவார மூவர் பெயர்கள் தொனி யில் அமைந்தமையும் காணலாம்.

இராசிகளின் பெயர்களும் இங்ங்னம் செ. 48லும், 123 லும் அமைந்துள்ளன:

‘தலைவியின் நெற்றி-தனு (வில்); குழை (காது)-மகரம் (மீன்); முலை-கும்பம் (குடம்); பார்வை (கண்)-மீன்போலும்’ என்று கூறவந்தவர் கன்னி, தனு, மகரம், கும்பம், மீனம் என்ற இராசிகளின் பெயரைத் தொனியில் அமைத்துள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/105&oldid=1389153" இலிருந்து மீள்விக்கப்பட்டது