பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
101

வல்லம்எனும் கொங்கையாள் மாகாளம் போற்கண்ணாள்
முல்லைவாய் உற்றதெனும் மூரலாள்-சொல்லியசீர்
ஏற்றிடுகுற் றாலந்தான் என்னும் வயிறுடையாள்
சாற்றிடுமா யூரம்எனும் சாயலாள்-போற்றலுறும்
வஞ்சி யிடையாள் வலஞ்சுழி நல் உந்தியாள்

கஞ்சனூர் அன்ன கதிநடையாள்.

குறிப்புரை பின் வருமாறு:–

வல் அம் எனும் - சூது ஆடு கருவியின் அழகையுடையள் என்று சொல்லப்படும்; மாகாளம்போல்-கொடியவிஷம் போன்ற; முல்லைவாய் உற்றது - முல்லை அரும்பு வாயில் பொருந்தியது; (முல்லைவாய்-திருமுல்லைவாயில் எனும் தலம்) குறு ஆலம்-குறிய ஆலிலை; மாயூரம்-மயிலின் சாயல்; வஞ்சிவஞ்சிக்கொடி போன்ற இடையையுடையவள். (வஞ்சி-திரு வஞ்சைக்களம் எனும் தலம்); வலம்சுழி-வலமாகச் சுழித்த; கஞ்சன்ஊர்-பிரமன் ஊர்ந்து வருகிற.

இப்பகுதியில் திருவல்லம், திரு (அம்பர்) மாகாளம், திரு முல்லைவாயில், திருக்குற்ருலம், மாயூரம் (திருமயிலாடுதுறை) திருவஞ்சைக்களம், திருவலஞ்சுழி, கஞ்சனூர் என்ற தலப் பெயர்கள் தொனிக்கின்றன.

கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் அவர்கள் பாடிய நூல்களுள் இன்னென்று சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம் என்பதாகும். இதில் மன்மதோபாலம்பனம் ஆக அமைந்த பாடல் வருமாறு:

பிரபவனாகிப் பிரஜோர் பத்தி செய்கின்ற மன்மதா-இன்று
    பேதையேன் தன்னைப் பரிதாவி யாக்கலென் மன்மதா
பரவுங் கடலினைத் துந்துபியாக்கொண்ட மன்மதா-நீயும்

    பைாவமார் களுக்குவிரோதியா யினதென்ன மன்மதா
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/108&oldid=1389167" இலிருந்து மீள்விக்கப்பட்டது