பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
102



வானின்மேற்கு ஓடும்துன் மதியைக் குடையாக்கி மன்மதா காற்றாம்
     வடக்கோடும் தேர்கொண்டாய் இதுவென்ன காலயுத்தி
மன்மதா மீனகே தனத்தினால் விஜயம் பெறலாமோ மன்மதா யார்க்கும்
     விகுருதியா காதிருந்தான் மிகவும் ஜயமாமே மன்மதா
தேனார் மலரம்பால் ஆனந்த மடைகின்ருய் மன்மதா-சீறும்
     திறவம்பொன் றுளதாயின் பிரமாதி யாவையே மன்மதா
மானோர் கரமுற்ற ஈசுவரன் முன்னுளின் மன்மதா-உன்னை
     வாட்டிய காலையில் சாட்டும் குரோதி யல்ல மன்மதா
தெரியும்இவ் வுலகத்தில் ஏவர்கீ லகத்தினுல் மன்மதா - என்மேல்
     சித்திரபா னுவைபோல மெத்தவும் காய்கின்ருய் மன்மதா
சரபோஜி மகராஜர் தமைநான் மருவச்செய் மன்மதா-நீ

     சருவஜித் தாகிமேல் அக்ஷய னாகுவாய் மன்மதா.

குறிப்புரை:- பிரபவன்-புகழையுடையவன். பிரஜோத் பத்தி-மக்களை யுண்டாக்குதல். பரிதாபி.துன்புறுபவள். துந் துபி-முரசு. விரோதி-பகைவன். துன்மதி-கெட்ட சந்திரன் காலயுக்தி-காலத்திற்கு உரிய யுக்தி. விஜயம்-வெற்றி. விகிருதி-வேறுபாடான இயல்பு. ஜயம்-வெற்றி. பிரமாதி-மிக்க வலியையுடையவன். குரோதி-கோபமுடையவன். கீலகம்-கலகம். சித்திரபானு-அக்கினி. சருவஜித்-எல்லாவற்றையம் வெல்பவன். அக்ஷயன்-அழிவற்றவன்.

இதில் பிரபவ முதலாய பத்தொன்பது ஆண்டுகளின் பெயர்கள் தொனியில் அமைத்திருத்தல் காணலாம்.