பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. தோட்டிமையுடைய தொண்டர்

திருத்தொண்டர் சிறப்பு

இறைவன் தொண்டர் உள்ளத்து அடக்கம், ஆகவே, தொண்டர் தம் பெருமையைச் சொல்ல முடியாது என்று கூறிஞர் ஒளவையார். *மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான் வாயாரத் தன்னடியே பாடும் தொண்டர் இனத்தகத்தான்’ என்று அப்பரும் தொண்டர்களிடத்து இறைவன் விற்றிருப்பதை அருளா நிற்பர். இத் திருத் தொண்டர் சிறப்பைச் சேக்கிழார் திருக்கூட்டச்சிறப்பு” என்ற தலைப்பில் பெரிய புராணத்தில் சிறிது விரிவாகவே பாடியுள்ளார்.

அடியவர் தம் மேனியில் திருநீறு பூசியிருப்பர்; தாம் பூசும் நீறுபோல் உள்ளமும் தூய்மை யுடையராயிருப்பர்; பூதம் ஐந்தும் நிலை தடுமாறினும் இறைவன் மலர்த்தாளே மறக்க மாட்டார்கள்; கெடுதி வரின் அதற்காக மனம் கலங்கு தலோ, நன்மை வரின் அதற்காக மகிழ்தலோ இலர்; ஒடும், செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் இயல்புடையவர்; அடி யார்களைக் கண்டால் அன்புமீக்கூர்ந்து வணங்குதலில் விருப்பம் உடையராயிருப்பர்; கண்டிகையை ஆரமாகக் கொள்வர்; கந்தையையும் மிகையாகவே கருதுவர்; யாவர் மாட்டும் அன்பு பூண்டு விளங்குவர்; அடியவர்களுக்கு ஊறு வந்தவிடத்து அஞ்சாமையுடையராய் வீரத்துடன் அவர் களைக் காக்கும் இயல்பினர் ஆவர்' என்பன சேக்கிழார் தொண்டரைப்பற்றி அங்குக் கூறியனவாகும்.

தொண்டர் தம் பெருமை தடுத்தாட்கொண்ட புராணத் தில்,

'பெருமையால் தம்மை யொப்பார்

பேணலால் எம்மைப் பெற்ருர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/110&oldid=676645" இலிருந்து மீள்விக்கப்பட்டது