பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
109



வருகின்றனன்; நீவிர் முத்துச்சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னம் ஆகியவற்றை நம்மிடத்திருந்து எடுத்துச் சென்று அவற்குக் கொடுங்கள்” என்றருளி மறைந்தார். அந்தணர் யாவரும் விழித்தெழுந்து தாம் தாம் கண்ட கனவைக் கூறி மகிழ்ந்து கோயில் வாயிலில் குழுமினர்; திருப்பள்ளியெழுச்சிக் காலத்தில் கோயிற் கதவுகளைத் திறந்து, திருக்கோயிலி னுள்ளே முத்துச் சிவிகையும் முத்துக் குடையும் முத்துச் சின்னங்களும் இருத்தலேக் கண்டனர்; அவற்றை எடுத்துக் கொண்டு சம்பந்தர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றனர்.

சிவபெருாைன் சம்பந்தர் கனவிலேயும் தோன்றி, 'நாம் உனக்கு அளிக்கும் முத்துச்சிவிகை முதலாயின வற்றை ஏற்றுக்கொண்டு சிவிகையில் ஏறி வருக’’ என்று கூறியருளினுர் சம்பந்தரும் தம் கனவைத் தம் தந்தை யாரிடமும் மற்றத் தொண்டர்களிடமும் கூறி வைகறையில் நித்திய கன்மங்களே முடித்துக்கொண்டு திருவைந்தெழுத்தை ஓதிக்கொண்டு இருந்தார்.

அவ்வமயம் 'அர அர’’ என்னும் ஒலி முழங்க முத்துச் சிவிகை முத்துக்குடை முத்துச் சின்னங்கள் ஆகியவற் றுடன் அரத்துறையினின்று அன்பர்கள் வந்தனர்; சம்பந் தரை வணங்கித், “திருவரத்துறை இறைவன் அளித்தருளிய இவற்றை ஏற்றருள்க’ என்று வேண்டினர். சம்பந்தரும்,

“எந்தைஈசன் எம்பெருமான் ஏறமர் கடவுளென்று ஏத்திச்

சிந்தை செய்பவர்க் கல்லால் சென்றுகை கூடுவதன் ருல்”

என்ற திருப்பதிகத்தைப் பாடி, “அரத்துறை அடிகள் தம் திருவருள் இது” என்று திருப்பதிகத்தை நிறைவாக்கி ஞர்; முத்துச் சிவிகையை வலம் வந்தார்; கீழே வீழ்ந்து வணங்கினர்; வெண்ணிற்ருெளி தோன்ற அவ்வொளியினைத் துதித்தார்; இஃது ஆதியார் திருவருள் என்று உலகெலாம் உய்ய, அஞ்செழுத்து ஒதிச் சிவிகையின் மீது ஏறியருளினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/116&oldid=981200" இலிருந்து மீள்விக்கப்பட்டது