பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
110



'சோதி முத்தின் சிவிகைசூழ் வந்துபார்

மீது தாழ்ந்துவெண் ணிற்ருெளி போற்றிநின்று ஆதி யார் அருள் ஆதலின் அஞ்செழுத்து ஒதி ஏறினர் உய்ய உலகெலாம்”

தொண்டர்கள் 'அரஅர முழக்கம் செய்து ஆர்த்தனர். சம்பந்தர் சிவிகையில் அமர்ந்த காட்சி திருப்பாற் கடலில் வளர்மதி உதித்தாற் போன்று இருந்தது. இறைவன் அருளிய எக்காளம், 'உலகமேழும் தவத்தினரும் உய்யும் வண்ணம் திருஞானசம்பந்தன் வந்தான்” என்று இயம்பியது; திருச் சின்னம், உமாதேவியார் ஞானப் பாலூட்ட உண்ட பாலரு வாயன் வந்தான்’ என்று ஊதியது; தாரை, எல்லாக்கலை களையும் ஒதா துணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான்’ என்று ஒலித்தது. சம்பந்தர் திருக்கோயிலுக்குச் சிறிது துாரத்தி லேயே சிவிகையினின்று இறங்கிக் கோயினுட்புகுந்து பொரு ளும் ஞானமும் போகமும் போற்றி என்பார்க்கு அருளும்”, திருவரத்துறைப் பெருமானே வணங்கி ஏழிசைத் திருப்பதிகம் பாடி அத்திருப்பதியிலேயே சின்னுளிருந்தருளினர்.

உலகெலாம்

சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் புராணத்தைப் பாடுவதற்குத் தில்லைப் பெருமான் எடுத்துக் கொடுத்தருளிய தொடர் 'உலகெலாம்” என்பதாகும். சிவபெருமானின் திரு வருட்டிறத்தை மறவாதிருத்தற் பொருட்டும், அப்பெருமா னின் அருட்டிறத்தை நூலுக்கு மிகுவித்தற் பொருட்டும், அவ்விறை அருளிய 'உலகெலாம்” என்னும் தொடரை முதற்கண் வைத்ததோடு திருநெல்வாயில் அரத்துறையில் சம்பந்தர் முத்துச் சிவிகையில் ஏறியருளிய செய்தியைக் கூறும்,

"சோதி முத்தின் சிவிகைசூழ் வந்துபார்

மீது தாழ்ந்துவெண் ணிற்ருெளி போற்றிநின்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/117&oldid=981204" இலிருந்து மீள்விக்கப்பட்டது