பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
111



ஆதி யாரருள் ஆதலின் அஞ்செழுத்து ஓதி ஏறினர் உய்ய உலகெலாம்”

என்ற பாடலில் பெரிய புராணத்து நடுவிலும்,

"என்றும் இன்பம் பெருகும் இயல்பிைேடு

ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட மன்றுளார் அடியார் அவர் வான் புகழ் நின்றது எங்கும் நிலவி உலகெலாம்'

என்ற பாடலில், பெரியபுராணத்து இறுதியிலும் வைத்துச் சேக்கிழார் போற்றினர். இச்செய்தியைத் திரிசிரபுரம் மகா வித்துவான் மீனுட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் தாம் பாடிய சேக்கிழார் பிள்ளேத்தமிழ்-காப்புப்பருவம் முதல் பாடலில்,

'பார்கொண்ட தொண்டர்வர லாறுசொல் புராணம் அம்

பலவரரு ளால் அமைந்த படிதெரித்திட உலகெ லாம்’ எனும் சுருதிநாப்

பண்ணும்ஈற் றும்பொருத்தி’’

என்று குறித்துள்ளார்.

எந்தை ஈசன்

இது சம்பந்தர் திருநெல்வாயில் அரத்துறையில் பாடிய பதிகத்தின் முதற்குறிப்பு. இறைவன் அளித்த முத்துப்பல்லக்கு முதலியவற்றை அரத்துறை அ ன் பர்கள் கொணர்ந்து கொடுத்து ஏற்றருள்க’ என்ற பொழுது, சம்பந்தர் இப் பதிகத்தைப் பாடினர். இறைவன் திருவருளைப்பெறுவதற்குரிய வழி யாது என்று இப்பதிகத்தில் நன்கு சொல்லப்பெற்றுள்ளது. திருக்கடைக்காப்பிலும் 'அரத்துறை அடிகள் தம் அருளை முறைமையாற் சொன்ன பாடல்’ என்றிருத்தல் காணலாம். இப்பதிகத்தைச் சிந்தை செய்யும் திருப்பதிகம்' என்பர் சேக்கிழார். ‘ஏத்திச் சிந்தை செய்பவர்க்கல்லால் சென்று கைகூடுவது அன்ருல்”, என்ற சம்பந்தர் வாக்கை ஒட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/118&oldid=981208" இலிருந்து மீள்விக்கப்பட்டது