பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

அமைந்ததே சேக்கிழார் வாக்கு. ஏத்திச் சிந்தை செய்தல்எம்பெருமான் சீ ரு ம் செல்வமும் ஏத்துதல் - பேணிப்பணி கலந்து செய்தல் - உன்னிநைதல் - உள்கி உருகுதல்- ஏத்திப் பரவுதல் - பேணும் சீல முடையராதல் - போற்றி என்றல் வணங்கி நைதல் ஆகிய இவையே இன்னருள் பெறற்குரிய வழி என்று இத் திருப்பதிகத்து நிரலே சொல்லப்பெற்றுள்ளது.

அப்பர் திருக்குறுக்தொகை

திருநாவுக்கரசு சுவாமிகளும் திருநெல்வாயில் அரத் துறைக்குச் சென்று பாடிய பதிகம் ஒன்று உண்டு. அது s H ■ 轟 +. 輯 o

‘கடவுளே’ என்று தொடங்கும் திருக்குறுந்தொகையாகும். இதில் 'ஒப்பாரி (ஒப்பு) இல்லாத ஒருவன்’ என்று முதற் பாடலில் கூறி, அங்ங்ணம் ஒர் உவமன் இல்லி’ ஆகிய கட வுளே நாம் தொழுவதற்காக இன்ன இன்னவற்றை ஒத் திருக்கிருர்’ என்று கூறப் பெற்றுள்ளது. பெரும்பாலும் எல்லாப் பாடல்களிலும் விண்ணுேரும் அறிகிலார்' என்றுள்ளது. “இறைவன் எல்லாவுயிர்க்கும் இறை-கற்ருர்க்கு ஒர் அமுதுகரும்பு ஒப்பான் - கரும்பினிற் கட்டி போல்வன் - அரும்பு ஒப்பான் - சுரும்பு ஒப்பான் - நெய் ஒப்பான் - நெய்யிற் சுடர் போல்வன் - நெதி ஒப்பான் - புனல் ஒப்பான் - அனல்ஒப்பான் - இத்தகைய இறைவனே நாம் தொழல்வேண்டும்' என்பதே இப்பதிகம் துதலிய பொருளாகும். ஒப்பாரி இலாதார்க்கு ஒப்பனேயாவும் சொல்லிய ஒப்பற்ற கருத்துடைய பதிகம்’ என்பர் C. K. சுப்பிரமணிய முதலியார் அவர்கள்.

சுத்தரரும் அரத்துறையும்

சுந்தரர் திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்து மகிழ்ந் திருந்தார்; வசந்த காலம் வந்தது; திருவாரூர்ப் பெருமானே நினைத்தார்; ஒற்றியூரை விட்டகன்ருர்; சங்கிலியார்க்கு அளித்த வாக்குறுதியைத் தவறியமையின் இருகண்களின் ஒளியும் மறையப் பெற்ருர்; திரு வெண்பாக்கத்தில் ஊன்று