பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 lo

கோல் பெற்ருர்; காஞ்சிபுரத்தை அடைந்தார்; இடது கண். பார்வை வரப் பெற்ருர்; பின்னர் ந் திரு ஆமாத்துார் வழியாகத் திரு நெல்வாயில் அரத்துறை அடைந்து கல்வாயகிலும்’ என்று தொடங்கும் திருப்பதிகம் பாடினர்.

பதிகச் சிறப்பு

இப்பதிகம் இரண்டாவது பாடலில் எற்றே ஒரு கண்ணி லன்' என்றமையால் ஒருகண் ஒளியின்றி இப்பதியைச் சுந்தரர் வணங்கினுர் என்றும், இப்பதிகம் பாடிஞர் என்றும் அறிய லாம். ஒரு கண்ணிலேன்; உன்னே யன்றி ஒரு பற்றிலேன்: அடியேன் உய்யப் போவதோர் சூழல் சொல்லே’ என்பது இப்பதிகப் பொருளாகும். இப்பதிகம் தமிழ் இலக்கிய நயமும், நீதி ஞான மொழிகளின் நயமும், தத்துவ நிச்சயம் ஆகிய உப தேச நயமும் செறிந்த அருமைப்பாடு உடையது; திருக்குறட் கருத்துக்களும் காணப்படுவது” என்பர் திரு C. K. சுப்பிர மணிய முதலியார் அவர்கள்.

யாக்கை நிலையாமை

யாக்கை நிலையாமையைக் கூருதார் இல்லை; கற்ருரும் கல் லாரும் பேச்சளவில் சொல்லிக்கொண்டுதான் இருக்கிருர்கள். குழந்தை பிறந்ததும் மன்பதை அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லே. பிறந்ததுமே மகிழ்ச்சி ஆரவாரம். தாயும் சேயும் நலம் - இடையருது மகிழ்ச்சி. சேய் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்கிறது - பின்னும் மகிழ்ச்சி. பெயரிடல் முதலியசடங்குகள்-ஆரவாரம் மகிழ்ச் சி. குழந்தை குறுகுறு நடத்தலில் மகிழ்ச்சி-அற்றம் மறைத்தும் மறைக் காமலும் உடுத்தலில் மகிழ்ச்சி; ஆடை ஆபரணங்களால் அலங்கரித்துக் கொள்ளுதலில் மகிழ்ச்சி; நல்ல இல்லாளே அடைந்து இன்பம் துய்த்தலில் மகிழ்ச்சி; இப்பொழுதெல் லாம் யாக்கை நிலையாமை பற்றி நினே க்கக்கூட நேரமில்லை. நரை வருகிறது. இது இளமை நிலையாமையை அறிவிக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/120&oldid=676655" இலிருந்து மீள்விக்கப்பட்டது