பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

தூது. ஒடும் புனற்கரையாம் இளமை - என்பர் சுந்தரர். செ. 4-ல் நரை வந்த நிலையில் யாக்கை நிலையாமை நினைத்த லும் பேசலும் ஒரோவழி நிகழும். பின்னர் மூப்புச் சாக்காடு. இத்தகைய யாக்கை நிலையாமையை நாலடியார்,

‘புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி இன்னினியே செய்க அறவினை - இன்னினியே நின்றன் இருந்தான் கிடந்தான் தன் கேளலறச் சென்ருன் எனப்படுத லால்' - என்று கூறுகிறது.

யூரீகுமரகுருபரசுவாமிகளும் சிதம்பரம் செய்யுட்கோவை நீதிநெறி விளக்கம் ஆகிய நூல்களில்,

'நீரிற் குமிழி இளமை நிறைசெல்வம் நீரிற் சுருட்டு நெடுந்திரைகள் - நீரில் எழுத்தாகும் யாக்கை நமரங்காள் என்னே வழுந்தாத தெம்பிரான் மன்று”

என்று இளமை யாக்கை நிலையாமைகளைப் பாடியுள்ளார் இவற்றை நாம் படித்துள்ளோம். படித்திருப்பினும் என்! * இந்நிலையாமையைச் சொல்லிக்கொண்டேதான் இருக்கிருேம் உணர்வதில்லை’ என்று சுந்தரர், நல்வாயில் செய்தார் நடந் தார் உடுத்தார் நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில் சொல்லாய்க் கழிகின்றது” என்ற பாடற் பகுதியில் குறிப்பிட் டுள்ளார். இரண்டாவது பாடலிலும் வறிதே நிலையாத இம் மண்ணுலகு’ என்று இந்நிலையாமைகள் குறிக்கப்பட்டுள்ளன

திருக்குறட் கருத்து

இறந்தவர் பிறத்தலும் பிறந்தவர் இறத்தலும் புதுவ தன்று இவ்வுலகத்து இயற்கை. 'உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு’’ என்பர் திருவள்ளுவர். இதனைச் சுந்தரர் 4ஆவது பாடலில் 'உறங்கி விழித்தாலொக்கும் இப்பிறவி’ என்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/121&oldid=676656" இலிருந்து மீள்விக்கப்பட்டது