பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

இப்பாடலில் இரண்டாய்” என்றது தனித்தும் உயிர் கள் தோறும் விரவியும் நின்ற நிலையை. தமிழ்ச்சிங்கம்’ என்றது சிவஞான போதத்தை அருளிச் செய்த மெய்கண்ட தேவரை. இது முதுமொழிமேல் வைப்பின் முதற்பாடலாகும். இந்நூலின் 187-ஆம் பாடல், வீட்டின் பாலில் முதற்பாடல் ஆகும். அது பின் வருமாறு:

"வள்ளுவரும் தாமும் மதித்தபொருள் ஒன்றென்றே

தெள்ளு தமிழ்விரகாய்ச் செப்பியது - சொல்லின் அகர வுயிர்போல் அறிவாகி எங்கும் நிகரிலிறை நிற்கு ம் நிறைந்து’’.

இப்பாடலில் தாமும்’ என்றது திருவருட்பயன் என்னும் நூலை அருளிய உமாபதி சிவாசாரியாரை.

பிற பாடல்களை நினைவூட்டுதல்

இப்பதிகம் ஏழாவது திருப்பாடலில் மணக்கோல மதே பினக் கோலமதாம் பிறவியிதுதான்’ என்றவரி, மணமகனே பிணமகளுய் மணப்பறையே பிணப்பறையாய்” என்ற பரஞ் சோதி முனிவர் திருவிளையாடற் புராணம்- பழியஞ் சின. பட லம் 40-ம் செய்யுளை நினைவூட்டும்

'வானுர் நுதலார் வலைப்பட்டடியேன் பலவின் கனி ஈயது போல்வதன்முன்’ என்ற ஒன்பதாவது பாடலடி, உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்து ஈயின் ஒப்பாய் விழைதரு வேனே விடுதி கண்டாய்” என்ற திருவாசகத்தை நினைவூட் டும். 'மற்றேல் ஒரு பற்றிலன்’ (மூன்ருவது பா) என்ற தோடு எட்டாவது பாடல் நின்னுமம் பயிலப் பெற்றேன்.” என்றதையும் ஒருங்கு இணைப்பின், மற்றுப் பற்றெனக்கின்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்’ என்ற சுந்தரர் தேவாரமே நினைவுக்கு வரும்.