15. வார ண வாசி
வாரணவாசி - வாரணுசி
வாரண வாசி என்று கூறியதும், வாரணு சி என்ற சொல் நினைவுக்குவரும். வாரணவாசி வேறு; வாரணுசி வேறு. வாரணுசி என்பது காசியைக் குறிக்கும். வாரண அசி என்ற இரு சொற்களும் சேர்ந்து தீர்க்க சந்தி பெற்று வாரணுசி என்ருகும்; வாரண அசி என்ற இரு துறைகட்கு இடைப்பட்ட வூர் என்பது பொருள். ஆனல் வாரணுசியிலும் வேறுபட்ட தாகிய வாரணவாசி என்பது பற்றி, இலக்கியங்களிலும் கல் வெட்டிலும் பயின்றுள்ளவற்றை அறிவிப்பதே இக்கட்டுரை யின் நோக்கமாகும்.
குறிஞ்சிக்கலியில்
கலித்தொகை என்ற சங்க மருவிய எட்டுத் தொகை நூலில் ஒருபகுதி குறிஞ்சிக்கலி. இது 29 பாடல்களையுடையது. இதில் 24 ஆவது பாடலில், பின்கண்ட வரிகளில் வாரண வாசி என்பது பயின்றுள்ளது:
தெருவின்கண்,
காண மின்றிக் கலங்குவார்க் கண்டுநீ, வாரண வாசிப் பதம்பெயர்த்தல்!ஏதில நீநின்மேற் கொள்வது; எவன்?’’
'நம்மிடத்தில் யாதொரு காரணமும் இல்லாதிருக்கத் தெருவின் கண் யாரோ சிலர் கலங்குவதைக் கண்டு, நீ உனக்குத் தொடர்பில்லாதனவற்றை நீ உன்மேல் ஏற்றுக் கொள்வது, எதுபோல் இருக்கிறது என்ருல், வாரணவாசி யிலுள்ளாரது ஒழுக்கம்போல் காணப்படுகிறது” என்பது இவ்வரிகளின் பொருளாகும். வாரணவாசிப்பதம்’ என்ப