பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121

குறிப்பு: மாதர்ப்பிடி பெற்ற வாரணம்; அவ்வாரண த் தின் காதற் பெயரன் கனகளபன்’ என்பதற்கு ‘அழகிய பிடிபோன்ற விதுகுலநாயகி பெற்ற யானை போன்றவன்; அவ்யானைக்குரிய சிறப்புப் பெயராகிய கனகளபம் என்னும் பெயரினையுடையவன் (அல்லது) அவ்யானையின் விருப்பமான கனகளபன் என்ற பெயருடையவன்' என்றும் பொருள் கூறுவர். குலோத்துங்கனின் தாய் “விதுகுல நாய்கி” ஆவள் என்று குலோத்துங்க சோழனுலா 112-ஆம்கண்ணி (224ஆம் வரி)யில் கூறப்பெற்றுள்ளது. (குலோத்துங்க சோழனுலா பக்கம் 69 - கழக வெளியீடு). இப் பிறரு ைர ஈண்டைய ஆய்வுக்கு வேண்டியதன்று.

வாரணவாசி காடு

கன்னியாகுமரியும் அதன் சுற்றுப்புறங்களும், புறத்தாய நாடு என அழைக்கப்பெற்றது. அது முறத்தாய நாடு என வும் கூறப்பெற்றது. இந்நாடு வாரண வாசி நாடு என்று பெயர் பெற்றிருந்தது என்பதைப் பின்வரும் சாசனப்பகுதி கூறும்; ஸ்வஸ்திழரீ கொல்லம் 376-ஆவது மேட நாயிற்று 21 சென்ற சனியாண்ட மகத்துநாள் ரீபாண்டிய நாட்டுப் புறத்தாய நாடான தென்வாரண வாசி நன்னுட்டுப் புறத்தாய நாடான தென்வாரண வாசி நன்னட்டுக் குமரி கன்னியா பகவதியார் கோயிலில்...' இது கி.பி. 1231-க்குரிய கன்னியா குமரிக் கல்வெட்டு. (2) புறத்தாய நாட்டுக்குத் தென் வாரண வாசி நாடு என்ற பெயருண்மையை இக்கல்வெட்டுக் கூறி யிருக்க, அகத் தீசுவரம் பாறைக்கல்வெட்டு (3) தென் வாரண வாசி நாட்டைப் புறத்தாய நாட்டின் ஒரு பகுதியாகக் கூறு கிறது. அச் சாசனப்பகுதி பின் வருமாறு:

'ஸ்வஸ்திறுநீ அருளிச் செய்கை. புறத்தாய நாட்டுத் தென்வாசி வாரண நன்னுட்டு அகத்தீசுவரமான உதயமார்த் தாண்டச் சதுர்வேதி மங்கலத்து...” (தென் வாரணவாசி’ என்பது இக் கல்லெழுத்தில் தென்வாசி வாரணம்’ என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/128&oldid=676663" இலிருந்து மீள்விக்கப்பட்டது