பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123

கிழக்கு, கடலிலே அழிவூர்களும் குடிகால்களும் சுட்டும் அழித்தும் கொள்ளே கொன்டான் என்ற கல்வெட்டுப் பகுதி யில் வாரணவாசியாறு என்று ஒரு ஆறு குறிக்கப்பெற்றுள் ளது. இதனேக் கெடில ஆறு என்று ஆராய்ச்சியாளர் குறிப் பிடுவர். (5) திருக்கெடிலத்துக்கு வாரணவாசியாறு என்று பெயர் வரக்காரணம் சரியாகத் தெரிந்திலது. வாரணுசி என் பதை வாரணவாசி என்று தவருகக் கொண்டார்களோ என்று தோன்றுகின்றது. திருநாவுக்கரசர் திருக்கெடிலத்தைத் 'தென் திசைக் கெங்கைய தெனப்படும் கெடிலம்’ என்று கூறுவர். சேக்கிழாரும், தென்திசையில் கங்கை யெனும் திருக்கெடிலம்’ என்பர். ஆகவே கெடிலயாறு வாரணுசி யாறு என்று தொன்று குறிக்கப்பட்டுப் பின் தவருக வாரண வாசி என்று குறிக்கப்பட்டதாதல் வேண்டும்.

வயலைக் காவூரில்

معتم I+

வயலைக்காவூர் என்பது காஞ்சிபுரம் வட்டத்திலுள்ள ஒரூர். வாரணவாசி யுடையான் களப்பாளன் என்பான் அவ் ஆர்க் கோயிலைக் கற்றளியாக அமைத்து மண்டபம் கட்டிக் குடமுழுக்கு நடத்தி, விளக்கெரிக்க ஒரு மாடை (பொன்) அளித்தனன் என்று மூன்ரும் இராசராசசோழனது 27ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று(6) உணர்த்துகின்றது.

சகல புவனச் சக்கரவர்த்திகள் பூரீ கோப்பெருஞ்சிங்க தேவருடைய 16 ஆவது ஆட்சியாண்டுக்குரிய கல்வெட்டும், (7) வயலைக் காவூரிலிருந்த கோயிலுக்கு வாரணவாசீச்சுவர முடையார் கோயில் என்பது பெயர் என்றும். இசையூர் பலகண்ணன் தழுவக் குழைந்தான் திருவிழிமிழலையுடையான் என்பான் ஒருவன் ஒருசந்தி விளக்கு எரிக்க ரீவாரணவாசிச் சுரமுடையார் கோயில் காணியுடைய சிவப்பிராமணனிடத் தில் ஒரு மாடை (பொன்) அளித்தனன் என்றும் கூறுகிறது.

வயலைக்காவூர்க் கோயிலில் தந்திவர்ம பல்லவனுடைய இரண்டாவது ஆட்சியாண்டுக் கல்வெட்டுளது. அதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/130&oldid=676665" இலிருந்து மீள்விக்கப்பட்டது